×
 

குழந்தையின் கழுத்தில் இருந்த `தழும்பு’... சிறுமி மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்... விசாரணை வளையத்தில் தாய்...!

துள்ளி விளையாடி திரிந்த  10 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் பரிதாபமாக உயிரிழந்துள்ள   சம்பவம் கிராம மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,

பெரம்பலூர் அருகே 10 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு. ஆண் நண்பருடனான ரகசிய உறவுக்கு இடையூறாக இருந்ததால் சிறுமியின் தாயே பெற்ற மகளை கழுத்தை நெரித்து கொலை செய்தாரா? என போலீஸார் விசாரணை.

பெரம்பலூர் அருகே பகல் நேரத்தில் வீட்டில் தாயுடன் படுத்து உறங்கிக்கொண்டிருந்த  10 வயது சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து உள்ள நிலையில், இறந்த சிறுமியின் கழுத்தில் நெரிக்கப்பட்டது போன்ற தழும்பு இருப்பதால் சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தாயிடம் போலீஸார்  தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் கிராமத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளியான குணசேகரன் (34) என்பவரது மனைவி நிஷாந்தி (27).  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு கீர்த்திஷா(9) என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிஷாந்தி கடந்த 3 வருடமாக பாடாலூர் அருகே காரை கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் தனது தாய்வீட்டில்குழந்தை
யுடன் வசித்துவருவ
தாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த கிராமத்திலுள்ள அரசுப்பள்ளியிலேயே நிஷாந்தியின் மகள் கீர்த்திஷா 5 ஆம் வகுப்பு பயின்று வந்ததாகவும் தெரிகிறது.

இதையும் படிங்க: தாயா இல்லை பேயா?... கள்ள உறவுக்காக ஒன்றரை வயது குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற அம்மா கைது...!

இந்நிலையில் விடுமுறை தினமான இன்று  வீட்டில் மகளுடன் தங்கியிருந்த நிஷாந்தி மதியம் உணவு சாப்பிட்டு விட்டு தன் அருகில் படுத்திருந்த  மகள் கீர்த்திஷா அசைவற்று கிடப்பதாகவும், எழுப்பினால் எழுந்திருக்கவில்லை என்றும், இன்று பிற்பகலில் தனது கணவன் குணசேகரனுக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து  குழந்தையை காரை அரசு மருத்துவ மனைக்கு தூக்கி சென்றுள்ளார். 

மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகதெரிவித்துள்ளனர். அப்போது குழந்தையின் கழுத்தில் தழும்பு இருப்பதை பார்த்த  மருத்துவர்கள் சந்தேகத்தின் பேரில் காவல்நிலையத்திற்கு தகவல் தந்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பாடலூர் போலீஸார் குழந்தையின் இறப்பில் சந்தேகமுற்று  குழந்தையின் தாய் நிஷாந்தியிடம் தொடர் விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே மர்மமான முறையில் இறந்து போனதாக கூறப்படும் சிறுமி கீர்த்திஷாவின் உடலை மீட்ட போலீஸார் உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இறந்த சிறுமியின் கழுத்திலுள்ள தழும்பின் தன்மையை திருச்சி தடயவியல் நிபுணர்களை கொண்டு மருத்துவர்கள்  பரிசோதித்து வருகின்றனர். தடயவியல் அறிக்கை மற்றும் உடற்கூறு ஆய்வறிக்கை வந்த பிறகே குழந்தையின் இறப்பு குறித்து உறுதியான தகவல் தெரியவரும் .

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்தி வரும் விசாரணையில் கணவனை பிரிந்து தனியே வசித்து வரும் சிறுமியின் தாய் நிஷாந்திக்கு மணிகண்டன் என்கிற வேறு ஒரு ஆண் நண்பருடன் ரகசிய சினேகிதம் இருப்பதாக கூறப்படுவதால், சிறுமியின் உயிரிழப்பு சம்பவத்திற்கு வேறு காரணம் ஏதேனும் இருக்கலாம் ? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். நிஷாந்தியின் ஆண் நண்பராக கூறப்படும் மணிகண்டனை பிடித்து அவனிடமும் விசாரணை செய்தால்' மட்டுமே, சிறுமி கீர்த்திஷா உண்மையில் இயற்கையாக இறந்தாரா? அல்லது தங்களது தகாத உறவுக்கு இடையூறாக இருப்பதாக கருதி நிஷாந்தி அல்லது மணிகண்டனால் சிறுமிகொலை செய்யப்பட்டாரா? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்க வரும்.

சகதோழிகளுடன் சமுத்துவபுர தெருக்களில் துள்ளி விளையாடி திரிந்த 
10 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் பரிதாபமாக உயிரிழந்துள்ள   சம்பவம் கிராம மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

இதையும் படிங்க: திருத்தணி பண்ணைக்குள் சிறுவன் சடலம்... சிமெண்ட் தரை போட்டு மூடி மறைத்தது அம்பலம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share