எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த தலைவலி... சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்...!
எடப்பாடி பழனிச்சாமிக்கு 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கண்டனம் மற்றும் சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் .
தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மண்டல செயலாளர் மணிமாறன் தலைமையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் ஐ சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அந்த புகார் மனுவில், கடந்த 18.08.2025 அன்று 108 ஆம்புலன்சில் நோயாளிகளை ஏற்றுவதற்காக சென்ற டிரைவர் சுரேந்திரனை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 108 ஆம்புலன்ஸ் டிரைவரை பார்த்து இனி கூட்டத்திற்குள் ஆம்புன்ஸ் வந்தால் "ஓட்டிட்டு வருகிற டிரைவரே அதில் patient-ஆக போகிற நிலைமை வரும்" என அச்சுறுத்தி மிரட்டல் விடுத்துள்ளார் .
அப்போது கூட்டத்தில் இருந்தவர்களும் அச்சுறுத்தினர் . எனவே எடப்பாடி பழனிச்சாமி மீதும், 108 ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேந்தர் அவரது சட்டையை பிடித்து இழுத்து ID கார்டு, ஆம்புலன்ஸில் உள்ள எமர்ஜென்சி செல்போன் ஆகியவற்றை பறிக்க முயன்ற நபர்கள் மீதும் வன்முறை தடுப்பு மற்றும் உடைமை சேதார தடுப்புச் சட்டபடி வழக்கு பதிவு செய்து சட்டபடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: மலைவாழ் மக்களுக்கு கான்கிரீட் வீடு... அசத்தல் அறிவிப்புகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி..!
அச்சுறுத்தி மிரட்டல் விடுத்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கையை 108 பணியாளர்கள் சார்பில் வன்மையான கண்டனத்தையும் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர்
இதையும் படிங்க: மக்களை பாதுகாக்கும் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்ல.. திமுக அரசை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்..!!