×
 

#BREAKING: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! முழு விவரம்..!!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். 2025 - 26 கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 12,467 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 87.06 லட்சம் மாணவர்களின் 82.11 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

96.47% மாணவிகளும் 92.15% மாணவர்களும் பொது தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு அளவில் 97.57 தேர்ச்சி சதவீதம் பெற்று புதுக்கோட்டை மாவட்டம் முதலிடத்திலும் அதைத்தொடர்ந்து 97.54% பெற்று சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

97.41% உடன் தஞ்சாவூர் மூன்றாம் இடத்திலும் 97.31% திருச்சி மாவட்டம் அடுத்த இடத்திலும் 97.30 சதவீதத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் அடுத்த இடத்திலும் இருக்கின்றன. 85.89% மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

இதையும் படிங்க: பதறாதீங்க பசங்களா... இன்று வெளியாகும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்... அன்பில் மகேஷ் வாழ்த்து..!

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளங்களான tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகியவற்றில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில், இணையதளத்தில் SSLC Result 2026 என்ற லிங்க் செயல்படுத்தப்படும். மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு, கேப்ட்சா கோடை நிரப்பி உள்நுழைய வேண்டும். முடிவுத் தாளை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். 

இதையும் படிங்க: PM SHRI திட்டத்துக்கு அனுமதியா..? கொள்கையில் சமரசமா..? அமைச்சர் ராஜ்மோகன் பளீச் பதில்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share