×
 

TN BOARD EXAMS: தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழகத்தில் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்வுக்கான ஏற்பாடுகளை அரசு தேர்வு இயக்ககம் தீவிரமாக முன்னெடுத்தது. 

முன்னதாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. தமிழ்நாடு முழுவதும் 3,316 மையங்களில் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதேபோல், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது.

இதையும் படிங்க: மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் சாதனை... இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்!!

 இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்தப் தேர்வுகள் ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுத்தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர். 

இதற்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 48 ஆயிரத்து 426 பேர் தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியிலும்,தேர்வு கண்காணிக்கும் பணியில் 4 ஆயிரத்து 858 பேரும் ஈடுபட உள்ளனர்.

காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற இருக்கிறது. தேர்வின் முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசிப்பதற்கும், அடுத்த 5 நிமிடம் சுய விவரங்களை விடைத்தாளில் பதிவு செய்வதற்கும், 10.15 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வரைபடத்திற்கு ரூ.8 கோடியா? சர்ச்சையில் சிக்கிய பிரபல கோவில்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share