×
 

#BREAKING: 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அன்பில் மகேஷ்..!

இனி 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ எதிர்த்து, மாநிலத்தின் கலாச்சார, வரலாற்று மற்றும் சமூகத் தேவைகளுக்கு ஏற்ப ஒரு தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்க முடிவு செய்தது.

இதற்காக, 2021-ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு, தமிழ்நாட்டிற்கு பிரத்யேகமான கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்தது. 

இந்தக் குழு, ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி டி. முருகேசன் தலைமையில் 14 உறுப்பினர்களைக் கொண்டு 2022-இல் அமைக்கப்பட்டது. 

இதில் மாநிலத்தின் கல்வி முறையை மேம்படுத்துவதற்கு முக்கியமான பரிந்துரைகளை வழங்குவதற்காக ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், மற்றும் பொது அமைப்புகளின் கருத்துகளைப் பெற்று, விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இந்த குழுவின் பரிந்துரைகளை ஏற்று உருவாக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கை என்று வெளியிடப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார்.

இதையும் படிங்க: அன்பின் மகேஷ் தொகுதியில் பள்ளி மாணவர் மர்ம மரணம்! உண்மைகளை வெளிக்கொண்டு வர அன்புமணி வலியுறுத்தல்...

இந்த நிலையில், தமிழ்நாட்டின் மாநில கல்விக் கொள்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்தார். அப்போது, புதிய கல்விக் கொள்கை அடிப்படையில், தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும் என தெரிவித்தார்.

இனி, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

நடப்பு கல்வியாண்டு முதலே 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றும் அறிவித்துள்ளார்.

11ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்கள், தங்களை பொதுத் தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் ஆண்டாக 11ஆம் வகுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: என்னப்பா நடக்குது அங்க? முதன்முறையாக மத்திய அரசுக்கு எதிராக போர் கொடி தூக்கிய ஓபிஎஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share