16 வயது சிறுவனை சரமாரியாக அரிவாளால் வெட்டிய 11ம் வகுப்பு மாணவன்... வாய்த்தகராறின் போது கண்மூடித்தனமாக தாக்குதலால்...!
அம்பாசமுத்திரம் அருகே 16 வயது சிறுவனுக்கு அரிவாள் வெட்டு - 11 -ம் வகுப்பு மாணவனை பிடித்து போலீசார் விசாரணை
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தூத்துக்குடி, சிவகங்கை, நெல்லை, சென்னை என திரும்பி திசைகளில் எல்லாம் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர சம்பவங்கள் அரங்கேறி வருவது மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் நடந்து வரும் குற்றசம்பவங்களை கடுமையாக சாடி வரும் எதிர்க்கட்சிகள், தமிழகமா? கொலைக்களமா? என கேள்வி எழுப்பும் அளவிற்கு கொலை சம்பவங்கள் தினந்தோறும் அரங்கேறுவதாக குற்றச்சாட்டி வருகின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், சாதாரண வாய்த்தகராறின் போது அம்பாசமுத்திரம் அருகே 16 வயது சிறுவனை 11 -ம் வகுப்பு மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பூக்கட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் 11 -ம் வகுப்பு மாணவருக்கும் இடையே நேற்றிரவு திடீரென வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 11-ம் வகுப்பு மாணவன் வீட்டிற்கு சென்று அரிவாள் எடுத்து வந்து அந்த 16 வயது சிறுவனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளான். தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் இருந்த 16 வயது சிறுவனை அப்பகுதியினர் மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து தற்போது மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அந்த 16 வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்! ஈரானுக்கு வலுக்கும் கண்டனம்! தீர்மானம் நிறைவேற்ற ஐ.நா ஒப்புதல்!
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள அம்பாசமுத்திரம் போலீசார் பதினோராம் வகுப்பு மாணவனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்கள் இடையே அரிவாள் வெட்டு நடைபெற்ற சம்பவம் அம்பாசமுத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது..
இதையும் படிங்க: ஹார்முஸ் நீரினை..!! இந்திய கப்பல்களுக்கு அனுமதி... கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..!!