×
 

15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்..! தமிழ்நாடு அரசு நடவடிக்கை..!!

தமிழகத்தில் 15 ஐ பி எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு 15 ஐபிஎஸ் அதிகாரிகளை உடனடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் அனைவரும் உதவி காவல் கண்காணிப்பாளர் பதவியில் உள்ளவர்கள் ஆவர். இவர்களுக்கான புதிய பணியிடங்கள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள துணைப்பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.அன்ஜித் ஏ நயர் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊரக துணைப்பிரிவுக்கு உதவி காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பி.அங்கிதா தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை துணைப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எஸ்.அஸ்வினி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு துணைப்பிரிவுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளார். பிஸ்வஜித் பாண்டா திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி ஊரக துணைப்பிரிவுக்கு நியமனம் பெற்றுள்ளார். சத்ரியா கவின் டிஜே கடலூர் மாவட்டம் சிதம்பரம் துணைப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். எஸ்.இன்பா திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் துணைப்பிரிவுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளார். பி.மஞ்சிமா திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஊரக துணைப்பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மன்னம் சுஜித் சம்பத் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் துணைப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.கே.நேஹா இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் துணைப்பிரிவுக்கு உதவி காவல் கண்காணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளார். பிரியங்கா பர்கவ் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் துணைப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். ராகுல் வி கோபால் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை ஊரக துணைப்பிரிவுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளார். சைந்தானே ஸ்வப்நிலா அனில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துணைப்பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தனூ சிங் மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் துணைப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: கருணை அடிப்படையில் பணி நியமனம்... மத்திய மாநில அரசுகளுக்கு முக்கிய உத்தரவு..! ஹைகோர்ட் திட்டவட்டம்..!!

அசிஷ் புனியா இதற்கு முன்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி துணைப்பிரிவில் பணியாற்றி வந்தவர். இவர் இப்போது மதுரை நகரம் அண்ணா நகர் ரேஞ்சுக்கு உதவி காவல் கண்காணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்.இந்த பணியிட மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் உத்தரவிடப்பட்டுள்ளன. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள துணைப்பிரிவுகளுக்கு இந்த இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்ட காவல் நிர்வாகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அண்ணன் சீர் திட்டம்..!! ரூ.812 கோடி நிதி... குட் நியூஸ் சொன்ன அமைச்சர் ஜெகதீஸ்வரி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share