×
 

பராமரிப்பு பணியின் காரணமாக மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் 16 ரயில்கள் ரத்து..

 பராமரிப்பு பணி காரணமாக மார்ச் ஆறு மற்றும் ஏழாம் தேதிகளில் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணி காரணமாக மார்ச் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் சென்னை கடற்கரை தாம்பரம் இடையே  16 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில், சென்னை எழும்பூர்-கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் முன் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் பிற்பகல் 12:30 மணி முதல் 2 மணி வரை 16 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

அதன்படி சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே செல்லும் நான்கு ரயில்களும், கடற்கரை தாம்பரம் இடையே மற்றும் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது.

இதையும் படிங்க: கதறித்துடித்த மாணவன்... காப்பாற்ற சென்ற தலைமையாசிரியருக்கு கடைசியில் நேர்ந்த பரிதாபம்...!

அதேபோல செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே செல்லும் ஐந்து ரயில்கள் தாம்பரம் - கடற்கரை இடையே மட்டும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பகல் 12 முதல் 2 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் செல்லும் ஏழு ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பந்தயம் கட்டிய காளை உரிமையாளர்.. பறிபோன மாணவரின் உயிர்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share