#BREAKING: இடி தாக்கி 2 சிறுமிகள் பலி! சம்பவ இடத்திலேயே உயிர் போன சோகம்... கதறும் தாய்..!
ராமநாதபுரத்தில் இடிதாக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் அரியக்குடி புதூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் இடித்தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தனது இரு மகள்களும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவத்தால் பெரும் சோகம் ஏற்பட்டு உள்ளது. சிறுமிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் அரியக்குடி, புதூர் பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் ஹர்ஷிதா மற்றும் சபிதா பானு. இவர்கள் சத்திரக்குடி அருகே உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தனர். அக்கா, தங்கைகளான இருவரும் தன் தாயாருடன் சேர்ந்து அருகில் உள்ள ஆலங்குளம் கிராமத்திற்கு சென்றுள்ளனர். தாயார் முன்னே சென்று கொண்டிருக்கும் போது சிறுமிகள் இருவரும் ஒருவருடன் ஒருவர் விளையாடி கொண்டு பின் வந்ததாக தெரிகிறது.
அப்போது அந்த பகுதியில் இடி மின்னலுடன் லேசான சாரல் மழை பெய்துள்ளது. திடீரென இரண்டு சிறுமிகளும் சக்தியுடன் பின்னால் திரும்பி தாயார் பார்த்தபோது இருவரும் மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். சிறுமிகளின் தாய் கதறி துடித்த சத்தத்தை கேட்டு உடனடியாக வந்த அக்கம் பக்கத்தினர் இரண்டு சிறுமிகளையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் சிறுமிகளின் உடல்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்காவும் தங்கையும் இடித்தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஆவேசத்தில் முக்குலத்தோர் சமூகம்... எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!
இதையும் படிங்க: திமுக-காரங்க சம்பாதிக்கதான் சமூக நலத் துறையும் பள்ளிக்கல்வித்துறையும்! அண்ணாமலை ஆவேசம்