×
 

அதிகாலையிலேயே அதிர்ச்சி... ஓவர் ஸ்பீடில் பனைமரத்தில் மோதி அப்பளம் போல் நொறுக்கிய கார்... 2 இளைஞர்கள் உடல் நசுங்கி பலி...!

சாலையோரம் இருந்த பனை மரத்தில் கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

அதிகாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பனைமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் அம்மன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தளபதி (36)  இவருக்கு நேற்று  பிறந்த நாள் என்பதால் தனது  நண்பர்கள் தமிழரசன் (27), நிதீஷ் (25), சுதர்சன் (21), நரேன் (18), அபினேஷ் (21) ஆகியோருடன் பிறந்த நாள் கொண்டாத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் 6 பேரும் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

 பின்னர் இன்று அதிகாலை   திருவையாறில் இருந்து காரில் தளபதி உட்பட 6 பேரும் அம்மன்பேட்டைக்கு காரில் திரும்பியுள்ளனர். கார் கண்டியூர் அருகே வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது.

இதையும் படிங்க: காலையிலேயே அதிபயங்கரம்...!! - நின்றிருந்த லாரி மீது பாய்ந்த கார்... உடல் சிதறி 6 பேர் கோர மரணம்...!

இந்த விபத்தில் தளபதி மற்றும் அவரது நண்பர் தமிழரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த நான்கு. பேரையும் அவ்வழியே சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருவையாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கார் மீது லாரி மோதி கோர விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி பலி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share