×
 

கோர முகத்தை காட்டிய இயற்கை... லட்சக்கணக்கானோர் உயிரிழப்பு?... வெனிசுலாவிற்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து...!

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. 

வெனிசுலா நாட்டில் சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பெரும் பீதியடைந்து வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 7.1 மற்றும் 7.5 ஆக இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

இந்த நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, வெனிசுலா தலைநகர் கராகஸில் பல கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், 22 மாடிகள் கொண்ட கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நூற்றாண்டு காணாத பேரதிர்ச்சி... அடுத்தடுத்து வெனிசுலாவை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்...! 

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வெனிசுலாவுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நில அதிர்வுகள் காரணமாக மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த பேரிடரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெனிசுலா நிலநடுக்கம் தொடர்பாக அந்நாட்டு மக்களுக்கு துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் விரைவில் உரையாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வெனிசுலாவைத் தொடர்ந்து ஜப்பானிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.9 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே கடும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினை ஏளனம் செய்த சி.எம்... விஜய்க்கு நேரடி வார்னிங் கொடுத்த திருமாவளவன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share