×
 

உதகையில் நாளை தொடங்கும் 21-வது ரோஜா கண்காட்சி! நீலகிரியில் சுற்றுலா பயணிகளை கவர பிரமாண்ட ஏற்பாடு!

இந்த ஆண்டு 'பறவைகளின் சொர்க்கம்' என்ற கருப்பொருளில் கண்காட்சி அமைக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனையொட்டி சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களை மகிழ்விக்கும் விதமாக உதகை ரோஜா பூங்காவில் 21-வது ரோஜா கண்காட்சி நாளை (மே 14) தொடங்குகிறது. இந்த ஆண்டு 'பறவைகளின் சொர்க்கம்' என்ற சிறப்பான கருப்பொருளைக் கொண்டு கண்காட்சி ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்று வரும் இந்தப் பணிகளில், சுமார் இரண்டு லட்சம் ரோஜா மலர்களைக் கொண்டு பல்வேறு பறவை இனங்களின் பிரம்மாண்ட வடிவங்கள் அமைக்கப்படவுள்ளன.

குறிப்பாக 60,000 ரோஜாக்களைப் பயன்படுத்தி அன்னப்பறவைகள், கழுகு, இருவாச்சி பறவை, புல் புல் மற்றும் ஆங்ரி பேர்ட் உள்ளிட்ட 14 வகையான பறவை வடிவங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.இது தவிர, பூங்கா முழுவதும் 4,310 ரகங்களைச் சேர்ந்த 33,000 செடிகளில் பல வண்ண ரோஜா மலர்கள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கக் காத்திருக்கின்றன.

இதையும் படிங்க: மசினகுடியில் பற்றி எரியும் காட்டு தீ சிங்காரா வனப்பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவிலான மரங்கள் கருகின!

கடந்த ஆண்டு மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற்ற ரோஜா கண்காட்சி, சுற்றுலாப் பயணிகளின் வேண்டுகோளுக்கிணங்க இந்த ஆண்டு ஐந்து நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை மிக அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதமான காலநிலையும், வண்ணமயமான ரோஜா மலர்களும் உதகையைத் தற்போது ஒரு சொர்க்கமாக மாற்றியுள்ளன.


 

இதையும் படிங்க: மக்களே கவனிங்க..! உதகை போக்குவரத்தில் மாற்றம்..! இன்று முதல் ஒரு வழி பாதை திட்டம் அமல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share