×
 

தேர்தல் வேட்டை: சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்... உள்ளே வந்த வருமான வரித்துறை...!

சென்னையில் ரூபாய் 245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அடையாறில் தங்க வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 

தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை முழுவதிலும் தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ச்சியாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அடையாறு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நின்று கொண்டிருந்த போது அப்போது ஒரு வாகனத்தை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் வந்து சோதனை மேற்கொண்டனர். 

அந்த சோதனையில் மொத்தம் 245 கோடி ரூபாய் அளவிலான வைரம் மற்றும் தங்க நகைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்களிடம் வந்து உரிய ஆவணம் வந்து கேட்டபோது அவர்களிடம் இல்லாததால் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை நுங்கம்பாக்கத்தில் வருமான வரித்துறை அதிகாரியிடம் 
ஒப்படைத்திருக்கிறார்கள். 

ஆனால் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உரிய ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அதனை தற்போதுதான் எடுத்து வரவில்லை. பின்னர் கொடுத்துவிட்டு வாங்கி செல்வதாக அவர்கள் தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுசம்பந்தமாக சாஸ்திரி நகர் போலீசார் விசாரணையை நிகழ்த்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில அந்த நகைகள் வந்து சவகார்பேட்டையில இருந்து பல்லாவரத்தில் இருக்கக்கூடிய ஒரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துக்கு கொண்டு செல்லும் போதுதான் பறக்கும் படையினர் பிடித்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் உரிய ஆவணங்கள் ஒப்படைத்த பின்னரே 245 கோடி அளவிலான வைரம் மற்றும் தங்க நகைகள் வந்து கொடுக்கப்படும் எனவும் தேர்தல் அதிகாரி தரப்பில ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதையும் படிங்க: களத்தில் இறங்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்..!! பிரேமலதா விஜயகாந்த் காரில் அதிரடி சோதனை..!!

இதையும் படிங்க: #BREAKING சென்னையில் கோடி கோடியாக சிக்கிய பணம்... கை மாறும்போது கையோடு பிடித்த பறக்கும் படை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share