கோழிப்பண்ணை அதிபர் வீட்டில் 2வது நாளாக தொடரும் ரெய்டு... சிக்கியதா முக்கிய ஆவணங்கள்?
இந்த காரணத்தினால் வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவையைத் தலைமையிடமாக கொண்ட சுகுணா சிக்கன் நிறுவனம் இந்தியா முழுவதும் 20 மாநிலங்களில் தனது வர்த்தகத்தை நடத்தி வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாது வங்கதேசம், கென்யா, இலங்கையில் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இவற்றின் நிறுவனங்கள் என்பது விரிவடைந்து இருக்கிறது. முக்கியமாக கடந்த சில ஆண்டுகளாக இவர்களது வருமானத்திற்கும், இந்நிறுவனம் தாக்கல் செய்த வருமான வரி கணக்கிற்கும் பொருத்தமில்லாமல் இருந்து வந்துள்ளது. இந்த காரணத்தினால் வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
நாமக்கல் மோகனூர் ரோட்டில் வசித்து வரும் வாங்கிலி சுப்பிரமணியம், இவர் கடந்த 50 ஆண்டுகளாக நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் முட்டைக்கோழி மற்றும் பிராய்லர் கோழிப்பண்ணைகள் நடத்தி வருகிறார். மேலும், கோழித்தீவன ஆலைகளையும், கோழி குஞ்சு பொறிக்கும் ஹேச்சரிகளையும் அவர் நடத்தி வருகிறார்.தமிழகத்தின் பல இடங்களில் பிராய்லர் கோழிப்பண்ணைகளை அவர் இண்டகரேஷன் முறையில் நடத்தி வருகிறார். தமிழ்நாடு முட்டைக் கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவராக அவர் செயல்பட்டு வருகிறார்.
அவருக்கு சொந்தமான அலுவலகம், நாமக்கல் திருச்சி மெயின் ரோட்டிலும், கிருஷ்ணகிரியிலும் செயல்பட்டு வருகிறது. நேற்று (23-9-2025) காலை சுமார் 10 கார்களில் நாமக்கல் வந்த 30 க்கும் மேற்பட்ட, வருமான வரித்துறை அதிகாரிகள் வாங்கிலி சுப்பிரமணியத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் நிதி நிறுவனம் ஆகிய மூன்று இடங்களில் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சுகுணா சிக்கன் நிறுவனத்தில் 14 மணி நேரமாக நீடிக்கும் சோதனை... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்...!
அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் உள்ள ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர்களில் கிடைத்த விபரங்கள் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வெளியாட்கள் யாரும் அவரது அலுவலகம் மற்றும் வீட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து ரெய்டு நடைபெற்று வருகிறது.
சிக்கிய ஆவணங்கள் என்னென்ன?
நேற்றையை சோதனையைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் நஷ்ட கணக்கு காட்டி குறைந்த அளவில் வருமான வரி செலுத்தி மோசடி செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் இந்த சோதனை நடத்தப்பட்டு பல்வேறு விதமான உண்மைகள் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வருமானவரித்துறையினர் சோதனையில் ரொக்கம், தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள் உள்ளிட்டவற்றை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரி ஏய்ப்பு செய்த பணத்தைக் கொண்டு தங்கம் மற்றும் சொத்துக்களை வாங்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு? - கோவை, நெல்லை, கன்னியாகுமரி போத்தீஸ் கடைகளிலும் ஐ.டி. ரெய்டு...!