20 அடி பள்ளம்... 2வது நாளாக தீவிரம்... பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி குறித்து கசிந்த முக்கிய தகவல்...!
விமானத்தின் இன்ஜின் பாகங்களை புதைந்த இடத்திலிருந்து வெளியே எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே நேற்று விமானம் கீழே விழுந்து வெடித்து விபத்துள்ளானது. விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரம்.
சென்னை தாம்பரம் விமானப்படைக்கு சொந்தமான விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது நேற்று மாலை திருப்போரூர் அருகே தனியார் உப்பளம் தொழிற்சாலை அருகே விழுந்து வெடித்து விபத்துக்குள்ளானது.
விமானத்தில் இருந்த விமானி ஒருவர் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார் தப்பிய விமானியை ஹெலிகாப்டர் மூலம் மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த விமான விபத்தில் விமானம் முழுதுமாக அப்பளம் போல் நொருங்கியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பார்வார்டு ப்ளாக்! கூட்டணிக்கு சிக்கல்! கேட்ட சீட் கிடைக்குமா?
விமானம் விபத்து ஏற்பட்ட இடத்தில் திருப்போரூர் காவல் துறை மற்றும் தீயணைப்புதுறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விமானம் விபத்து ஏற்பட்ட இடத்தில் இரண்டாவது நாளாக விமானப்படை அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் கருப்பு பெட்டியையும் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து .திருப்போரூர் தாசில்தார் சரவணன் கூறுகையில், நேற்று திருப்போரூர் அருகே விபத்துக்குளான விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு விபத்து நேரிட்ட இடத்தில் விமானத்தின் உதிரி பாகங்கள் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விமானம் கீழே விழுந்த இடத்தில் யாருக்கும் காயம் இல்லை. விமானி நேற்று பாராசூட் மூலம் பாதுகாப்பாக தரையிறங்கி விட்டார்.
விமானத்தின் இன்ஜின் பாகங்களை புதைந்த இடத்திலிருந்து வெளியே எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விமான கீழே விழுந்து வெடித்து சிதறியதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
முதல்கட்டமாக ஜே.சி.பி இயந்திரம் மூலம் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது அடுத்தகட்டமாக கிரேன் மூலம் மீட்பு பணிகளை துவங்கவுள்ளோம் என்றார்.
இதையும் படிங்க: SIR விண்ணப்ப படிவம்!! ஒருவாரம் தான் டைம்!! தீவிரம் காட்டும் தேர்தல் கமிஷன்!