ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 உயிரைக் காவு வாங்கிய கேஸ்...! சென்னையில் அரங்கேறிய பயங்கரம்...!
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த நான்காம் தேதி கேஸ் சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்த மூன்று பேரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த நான்காம் தேதி கேஸ் சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்த மூன்று பேரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
சென்னை நுங்கம்பாக்கம் அருகேயுள்ள வைகுண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வீரகுமார் மற்றும் அவரது மனைவி லட்சுமி மற்றும் இவருடைய மருமகன் குணசேகர் இந்த மூன்று பேரும் கடந்த நான்காம் தேதி இவருடைய வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் தீர்த்து போனதால், புதிய கேஸ் சிலிண்டரை மாற்றியுள்ளனர். அப்போது அருகே இருந்த விளக்கு எரிந்து கொண்டிருந்துள்ளது.
அதிலிருந்து அந்த கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் மூன்று பேருமே படுகாயம் அடைந்து தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் நேற்று இரவு முதல் அடுத்தடுத்து மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: தைப்பூசம் நாளில் பழனியில் நடந்த பகீர் சம்பவம்... பெண்ணுக்கு நடந்த கோரம்...!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்த மூன்று பேரும் உயிரிழந்தது அந்த குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடிய நிலையில இந்த விபத்து குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பஞ்சமி நிலத்தை வாங்கி பட்டா போட்ட ஓபிஎஸ்... ரத்து செய்ய நடவடிக்கை எடுத்த SC/ST ஆணையம்