நெல்லையில் அதிர்ச்சி... 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... வாக்குமூலத்தில் வெளியான ஷாக்கிங் உண்மை...!
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி அருகே உள்ள திருவரங்கநேரி கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், மூன்று பேரைச் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே திருவரங்கநேரி கிராமத்திற்குள் புகுந்த மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் மூன்று பேர் படுகாயம். ஏர்வாடி போலீசார் விசாரணை.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கிராமம் திருவரங்கநேரி, கிராமத்தில் இன்று மாலையில் 3 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அங்கே நின்று கொண்டிருந்தவர்களை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
சம்பவத்தில் திருவரங்கநேரி கிராமத்தைச் சேர்ந்த மனோகர், பெருமாள், சண்முகவேல் ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். மூன்று பேரும் சிகிச்சைக்காக வள்ளியூரில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நெல்லையில் பூட்டையே உடைக்காமல் மாயமான 30 சவரன் நகைகள்... போலீசுக்கு வந்த ஒரே ஒரு சந்தேகம்... அம்பலமான அதிர்ச்சி கதை...!
இச்சம்பவம் குறித்து ஏர்வாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரிவாளால் வெட்டி விட்டு தலைமறைவாகிய மர்ம கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டனர். ஏர்வாடி போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு சுரேந்திரன் என்பவரைக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருவரங்கநேரி கிராமத்தைச் சேர்ந்த இசைராஜாவுக்கும் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே இருந்த பழக்கம் காரணமாக ஏற்பட்ட முன்விரோதமே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் நலமுடன் இருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!