×
 

இரிடியத்தில் பலே மோசடி.. அதிமுக தலையில் இறங்கியது இடி... 30 பேரை தட்டித்தூக்கிய சிபிசிஐடி...!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இரிடியம் மோசடி தொடர்பாக சிபிசிஐடி சோதனை நடைபெற்று வருகின்றது. 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளல் சிபிசிடி போலீசார் இருடிஎம் மோசடி தொடர்பாக சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை 30 பேரை பிடித்து சிபிசிடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் 40 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு 30 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இரிடியம் விற்பனை செய்து கோடிக்கணக்கான ரூபாய் ரிசர்வ் வங்கியில் வைத்திருப்பதாகவும், அதில் வெளியே எடுப்பதற்கு பணம் தேவை என கூறி முதலீடு செய்ய வைத்து மோசடியில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்திருக்கிறது. 

ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால், ஒரு கோடி ரூபாய் தருவோம் என கூறி இந்த மோசடி கும்பல் பலரிடம் பணம் வசூல் செய்து ஏமாற்றி இருக்கிறது. இந்த மோசடி தொடர்பாக குவிந்த புகார்களை அடுத்து, சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் பிடிப்பட்ட 30 நபர்களிடமிருந்து லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் போலியான இரிடியம் ஆவணங்கள், லேப்டாப், செல்போன்கள் ஆகியவையும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இஎஇடியம் மோசடி வழக்கில் ராணிப்பேட்டை மாவட்டத்தில அதிமுக பிரமுகர் மூர்த்தி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு,  அவரையும் பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவரிடமிருந்து ஒரு நாலு லட்சம் ரூபாய் ரொக்கமும், பல லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல வேலூர் மாவட்டம் காட்பாடியில சித்தியான்பேட்டையை சேர்ந்த ஜெயராஜ் என்பவரது வீட்டிலிருந்து சோதனை நடத்தப்பட்டு பல்வேறு ஆவணங்கள்  பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல தமிழகத்தில 40 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு 30 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.  நெல்லை, சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். 

இதையும் படிங்க: பாமகவில் மேலோங்கும் ‘அக்கா’ அரசியல்... மகளதிகாரத்தை தொடங்கி வைத்த ராமதாஸ்...!

இதையும் படிங்க: “நான் பெத்த பிள்ளைக்கு திமுக பெயர் வைத்துக்கொள்கிறது....” - ஸ்டாலினின் ஸ்டிக்கர் அரசியலை தோலுரித்த இபிஎஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share