×
 

SIR எதிரொலி!! வங்கதேசம் திரும்ப முயன்ற ஊடுருவல்காரர்கள்! 300 பேர் கைது!

மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணி தொடர்வதால், இந்தியாவை விட்டு வெளியேற முயற்சிக்கும் போது, எல்லையில் வங்கதேசத்தை சேர்ந்த ஊடுருவல்காரர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தீவிரமாக நடந்து வருகிறது. வீடு வீடாக சென்று ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதால், சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் திடீரென தங்கள் நாட்டுக்குத் திரும்ப முயற்சிக்கின்றனர். இவர்களில் 300 பேர் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்ட எல்லைப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தும் பணி நடக்கிறது. மேற்கு வங்கத்தில் இந்தப் பணி மிகத் தீவிரமாக நடைபெறுகிறது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று விண்ணப்பப் படிவங்களை வழங்கி, ஆதார், பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்களைச் சரிபார்க்கின்றனர். இதனால் சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாதவர்கள் பயந்து போயுள்ளனர்.

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஹக்கிம்பூர் சந்தை அருகே உள்ள எல்லைப் பகுதியில் நூற்றுக்கணக்கான வங்கதேசிகள் ஒன்றுகூடினர். அவர்கள் வங்கதேசத்துக்குத் திரும்ப காத்திருந்தனர். அப்போது வந்த பாதுகாப்புப் படையினர் 300 பேரை மடக்கிப் பிடித்தனர்.

இதையும் படிங்க: பயப்படாதீங்க! எல்லாமே சட்டப்படி நடக்கும்! SIR குறித்து ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் தகவல்!

இவர்கள் பலிருந்து பெரும்பாலானோர் பல ஆண்டுகளாக இந்தியாவில் வீட்டு வேலை, கட்டட வேலை, தோட்ட வேலை செய்து வந்தவர்கள். இப்போது “பிடிபட்டால் சிறையில் தள்ளப்படுவோம்” என்ற பயத்தில் சொந்த நாடு திரும்புகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சபீனா பர்வீன் என்ற பெண் நிருபர்களிடம் பேசினார். “வங்கதேசத்தில் வேலை இல்லை. குடும்பத்தை காப்பாற்ற இந்தியாவுக்கு வந்தேன். பல ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து பணம் அனுப்பினேன். இப்போது ஆவணங்கள் இல்லாததை கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பயம். அதனால் வீடு திரும்புகிறேன். அங்கு கஷ்டம்தான் என்றாலும் பரவாயில்லை” என்று அவர் கண்ணீருடன் கூறினார்.

இன்னொருவரான அப்சர் கான், “என்னிடம் ஒரு ஆவணமும் இல்லை. சட்டவிரோதமாக வசித்தேன். இப்போது வாக்காளர் பட்டியல் சோதனையால் பயம். கைது செய்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால் திரும்பிப் போகிறேன்” என்றார்.

எல்லைப் பாதுகாப்புப் படையினர் (BSF) எல்லை முழுவதும் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். மேற்கு வங்கத்தின் பல எல்லை மாவட்டங்களில் இதுபோல் வங்கதேசிகள் நாடு திரும்பும் காட்சி தெரிய வருகிறது. அதிகாரிகள் கூறுகையில், “வாக்காளர் பட்டியல் திருத்தம் மட்டுமல்ல, சட்டவிரோத குடியேற்றத்தையும் கண்டறிய உதவுகிறது. இந்தப் பணி தொடரும்” என்றனர்.

இந்த நடவடிக்கைக்கு பாஜக ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். “தூய்மையான வாக்காளர் பட்டியல் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை” என்று அவர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: சிக்கன் நெக் பகுதியில் பாதுகாப்பு தீவிரம்!! இந்தியா ALERT MOOD! சீனா, வங்கதேசத்துக்கு செக்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share