×
 

#BREAKING சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு...“அடுத்தடுத்து 39 இன்டிகோ விமானங்கள் ரத்து” - காரணம் என்ன?

சென்னையில் 39 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 

சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு 8 மணியிலிருந்து இன்று காலை 8 மணி வரை சுமார் 12 மணி நேரத்தில் 39 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையில் இருந்து புறப்படவிருந்த 19 விமானங்கள் மற்றும் சென்னை விமான நிலையம் வரவிருந்த 20 விமானங்கள் என 39 இன்டிகோ விமானங்களின் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லக்கூடிய சர்வதேச விமானங்கள் உட்பட 39 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தென்மேற்கு வங்க கடலில் நிலைக்கொண்டிருந்த டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாகவே சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் கடும் சிரமங்களை சந்தித்து வந்த நிலையில், இன்று காலை முதலாவது விமான சேவை சீராகும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். 

தற்போது சென்னையில் மழையின் அளவு ஓரளவு குறைந்துள்ள போதும், நேற்று இரவு 8 மணியிலிருந்து இன்று காலை 8 மணி வரை சுமார் 12 மணி நேரத்திற்கு 39 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகளின் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டெல்லி, மும்பை, அகமதாபாத், ஜெய்பூர், ஐதராபாத், கொச்சி பெங்களூர், விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு சென்னையிலிருந்து புறப்படக்கூடிய 19 விமானங்களின் சேவையும்,  அதேபோல் டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை விமான நிலையம் வர வேண்டிய 20 விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: மீள முடியாத வேதனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்... முதல் ஆளாக ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி...!

கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 38 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டிருப்பது பயணிகளின் கடும் அவதிக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது. இலங்கை மற்றும் இந்தோனேசியாவில் வெள்ள பாதிப்புகள் தீவிரமடைந்துள்ளன. இதனால் அங்கு செல்வதற்கான விமான சேவை ரத்து செய்யப்பட்டிருக்கலாம்  என முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உள்நாட்டு விமான சேவையிலும் தடை ஏற்பட்டுள்ளது பயணிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இதையும் படிங்க: #BREAKING தமிழகமே எதிர்பார்த்த சட்டமன்ற தேர்தல்... தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share