×
 

நாட்டு வெடி வெடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் அதிரடி திருப்பம்... முக்கிய நபரை தட்டித்தூக்கிய போலீஸ்...!

ஆவடியில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஆவடியில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அருகே தண்டுரை விவசாயி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் அவரது மகன் விஜய் ஆகியோர், சட்டவிரோதமாக, அதிக சத்தத்துடன் வெடிக்கும் நாட்டு வெடிகள் மொத்தமாக வாங்கி வந்து, வீட்டில் பதுக்கி வைத்து, திருவிழா, இறுதி ஊர்வலம், பண்டிகை போன்ற நிகழ்வுகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருநின்றவூரை சேர்ந்த யாசின், சுனில் பிரகாஷ், சுமன், சஞ்சய் ஆகிய 4 பேர் ஆறுமுகத்தின் வீட்டிற்கு வெடி வாங்கச் சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் வாங்கிய நாட்டு வெடிகள் எதிர்பாராத விதமாக வெடித்து சிதறின. இதில், வீட்டின் கூரை, பக்கவாட்டு சுவர்கள் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தன. இந்த கோர விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி யாசின், சுனில் பிரகாஷ், சுமன், சஞ்சய் ஆகிய 4 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் நடந்த இடத்தை சுற்றி நள்ளிரவு வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: பஞ்சாப்பில் அதிர்ச்சி..!! தீப்பிடித்து எரிந்த ரயில்.. பதறியடித்து ஓடிய பயணிகள்..!!

தகவலறிந்து ஐந்து தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த 35க்கும் மேற்பட்ட வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். மீட்பு பணியில் பொக்லைன் இயந்திரம் ஈடுபட்டிருந்த போது, மேலும் வெடிகள் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

சம்பவத்தின் போது விஜய் வீட்டுக்கு வெளியே நண்பர்களுடன் நின்று பேசி கொண்டிருந்ததால் உயிர் தப்பினார். இதையடுத்து தலைமறைவான விஜயை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆறுமுகத்திடம் அவரது மகன் விஜய் குறித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விஜய்க்கு நாட்டு வெடிகளை வினியோகம் செய்ததாக கூடவாஞ்சேரியை சேர்ந்த மொத்த வியாபாரி கோவிந்தராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தீபாவளியை முன்னிட்டு, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நாட்டு வெடிகள் வாங்கி வந்து, விற்பனைக்காக வைத்திருந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இதையும் படிங்க: தீபாவளி எஃபெக்ட்..!! நாடு முழுவதும் தீவிர காற்று மாசுபாடு..!! டாப் லிஸ்டில் எது தெரியுமா..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share