ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 கோவில் குடமுழுக்குகள்..!! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!
மதவாத அரசியல் செய்வோர்க்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற 1,728 நாட்களில் 4,000 திருக்கோயில்களில் குடமுழுக்கு விழாக்களை நடத்தியுள்ளது. இது தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை நிகழாத மாபெரும் சாதனை என அவர் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோயில் குடமுழுக்குகள்!” என்று குறிப்பிட்டுள்ளார். இதில் முக்கிய மைல்கற்களை அவர் விவரித்துள்ளார். ஆயிரமாவது குடமுழுக்கு 2023இல் சென்னை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் நடைபெற்றது.
இதையும் படிங்க: அலங்காநல்லூரில் சீறப்போகும் காளைகள்! தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! முன்னேற்பாடுகள் தீவிரம்!
2,000ஆவது குடமுழுக்கு 2024இல் மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயிலில் நிகழ்ந்தது. 3,000ஆவது குடமுழுக்கு 2025இல் நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்றது. இன்று (ஜன. 28) நடைபெற்ற 4,000ஆவது குடமுழுக்கு சென்னை பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோயிலில் நடந்துள்ளது.
https://twitter.com/i/status/2016412347703951463
இந்தச் சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், “மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை! #DravidianModel = எல்லாருக்கும் எல்லாம்!” என்று குறிப்பிட்டு, திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படைக் கொள்கையை வலியுறுத்தியுள்ளார்.
இதோடு தொடர்புடைய ஒரு காணொலியையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்தச் சாதனை மூலம், அரசு அனைத்து சமூக மக்களுக்கும் சமமான மத சுதந்திரத்தையும், பாரம்பரியக் கோயில்களைப் பராமரித்தல் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: இமானுவேல் சேகரனாருக்கு பிரம்மாண்ட சிலை..!! நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!