×
 

காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம்: டிசம்பரில் 7.35 டி.எம்.சி. நீர் திறக்க உத்தரவு!

டெல்லியில் நடைபெற்ற 46வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் காவிரியில் 7.35 டி.எம்.சி. நீர் திறக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 46 கூட்டங்கள் நடந்து முடிந்திருக்கிறது. 

இதையும் படிங்க: டெல்லியில் ஓ.பி.எஸ் - அமித் ஷா சந்திப்பு: 20 நிமிட அவசர ஆலோசனையின் உள்நோக்கம் என்ன?

காவிரி ஆற்று நீரைத் திறப்பது தொடர்பாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46-வது ஆலோசனைக் கூட்டம் இன்று (டிசம்பர் 8) மதியம் 2.30 மணிக்கு டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை ஆணையம், டிசம்பர் மாதத்திற்கான நீரின் அளவை மாற்றியமைத்து, கர்நாடக அரசுக்கு 7.35 டி.எம்.சி. (TMC) நீரைத் தமிழகத்திற்குத் திறந்துவிட உத்தரவிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்தக் கூட்டத்தில், கர்நாடக அரசு ஆணையத்தின் முடிவுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் (Dispute) தெரிவிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: காற்று மாசால் மோசமாகும் தலைநகர் டெல்லி..!! இனி இவங்களுக்கெல்லாம் WFH..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share