×
 

தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 47 பேர் கைது..! கொந்தளிக்கும் ராமேஸ்வர மக்கள்..!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரத்தைச் சேர்ந்த 47 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. நள்ளிரவில் ராமேசுவரத்தை சேர்ந்த 47 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்துள்ளது இலங்கை கடற்படை. இந்த சம்பவம் மீனவ சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களின் ஐந்து படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ராமேசுவரத்தில் இருந்து நேற்று 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்தபோது 2 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரத்தைச் சேர்ந்த 47 மீனவர்களையும், 5 விசைப்படகுகளையும் சிறைபிடித்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மன்னார் கடற்படை முகாம் மற்றும் காங்கேசன் துறை கடற்படை முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: காரில் கஞ்சா.. பாஜக பிரமுகர் வேலூர் இப்ராஹிம் மகன் கையும் களவுமாக கைது..! சென்னை போலீஸ் அதிரடி..!!

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது புதிய விஷயமல்ல. கடந்த சில ஆண்டுகளாக இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. 2025ஆம் ஆண்டு மட்டும் ஏற்கனவே 17க்கும் மேற்பட்ட முறை இத்தகைய கைதுகள் நடைபெற்றுள்ளன. தற்போது இலங்கை அரசின் காவலில் 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களும், 237 படகுகளும் உள்ளன. இந்திய - இலங்கை இடையேயான சர்வதேச கடல் எல்லை (IMBL) தொடர்பான சர்ச்சைகள், மீன்பிடி உரிமைகள் போன்றவை இப்பிரச்சினைக்கு அடிப்படை காரணங்களாக உள்ளன.

தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகள் இலங்கை எல்லைக்குள் வருவதாக கூறி இலங்கை அரசு அடிக்கடி நடவடிக்கை எடுக்கிறது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்றன. மேலும், சில சம்பவங்களில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதும் நிகழ்ந்துள்ளது. இத்தகைய அட்டூழியங்களால் இரு நாடுகளுக்கிடையேயான உறவும் பாதிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இப்பிரச்சினையில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, இந்திய அரசு இலங்கை அரசுடன் கூட்டு மீன்பிடி உரிமை அல்லது எல்லை பிரச்சினை தொடர்பான உடன்பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என மீனவ சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த காலங்களில் நடந்த பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. தமிழக அரசு மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கி, அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இருப்பினும், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தால், மீனவர் சமூகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியம் சர்வதேச கடல் சட்டங்களை மீறியது என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியா-இலங்கை இடையேயான கடல் எல்லை பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகளில் விவாதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. மீனவர்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்துக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இதையும் படிங்க: 18 வயது மருமகனுடன் உல்லாசமாக இருக்க ஆசை.. மகளையே தீர்த்து கட்ட பிளான் போட்ட தாய்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share