×
 

வாழ்த்திய அன்பு நெஞ்சங்களே.. மனமார்ந்த நன்றி! நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி..!

தனது 50 ஆண்டு கால திரை பயண நிறைவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தைத் தொடங்கினார். இந்த 50 ஆண்டு காலப் பயணம், ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண வெற்றிக் கதையாகவும், தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு சென்ற புரட்சிகரமான பயணமாகவும் அமைந்துள்ளது. எந்தவித பின்புலமும் இல்லாமல், வறுமையையும், வாழ்க்கையின் போராட்டங்களையும் கடந்து, இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்த ரஜினியின் கதை, உழைப்பு, நம்பிக்கை, மற்றும் தனித்துவமான பாணியின் வெற்றிக் காவியம்.

1978 ஆம் ஆண்டு வெளியான பைரவி திரைப்படம், ரஜினியை முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகப்படுத்தியது. இந்தப் படம், அவரது திரைப் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின், முரட்டுக்காளை, நல்லவனுக்கு நல்லவன், முள்ளும் மலரும், புவனா ஒரு கேள்விக்குறி போன்ற படங்களில் அவரது எதார்த்தமான நடிப்பும், தனித்துவமான பாணியும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. 1980களில், ரஜினி ஒரு வணிக ரீதியான கதாநாயகனாக உருவெடுத்தார். பாஷா, தளபதி, அண்ணாமலை, படையப்பா போன்ற படங்கள், அவரை தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாகவும், சூப்பர் ஸ்டாராகவும் உயர்த்தின. இந்தப் படங்கள், அவரது தனித்துவமான உச்சரிப்பு, நடை, மற்றும் உரையாடல் வழங்கும் பாணியால் ரசிகர்களை கிறங்கடித்தன.ரஜினியின் திரைப் பயணத்தின் மற்றொரு முக்கிய அம்சம், அவரது பன்முகத்தன்மை. வில்லன், குணச்சித்திர நடிகர், காதல் நாயகன், மாஸ் ஹீரோ, ஆன்மீகப் பாத்திரங்கள் என பலவிதமான கதாபாத்திரங்களை அவர் ஏற்று நடித்தார்.

முள்ளும் மலரும் போன்ற படங்களில் அவரது உணர்ச்சிகரமான நடிப்பு, படையப்பா மற்றும் சிவாஜி போன்ற படங்களில் அவரது ஆக்ரோஷமான மாஸ் ஹீரோ பிம்பம், மற்றும் எந்திரன் மற்றும் 2.0 போன்ற படங்களில் அவரது புதுமையான அறிவியல் கற்பனைப் பாத்திரங்கள் என, ரஜினி தன்னை ஒவ்வொரு காலகட்டத்திலும் மறுவரையறை செய்து கொண்டார். இந்த பன்முகத்தன்மை, அவரை எல்லா தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்த ஒரு நடிகராக மாற்றியது.

இதையும் படிங்க: மருத்துவமனையில் முதல்வர் மு.க ஸ்டாலின்.. ஃபோனில் நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்..!

திரைத்துறையில் காலத்தால் அழியாத ரசிக பட்டாளத்தை பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்துள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும், பொதுமக்களும் வாழ்த்து கூறி உள்ளனர். இந்த நிலையில் தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். தனக்கு வாழ்த்துக் கூறிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன், அண்ணாமலை, சசிகலா, டிடிவி தினகரன், பிரேமலதா உள்ளிட்ட பல அரசியல் நண்பர்களுக்கு நன்றி கூறியுள்ளார். 

மேலும், கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

இதையும் படிங்க: 3வது முறை முதல்வரை சந்தித்த OPS... ஒரு வேளை அப்படி இருக்குமோ? வலுக்கும் விமர்சனங்கள்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share