×
 

20 மூட்டைகளில் கண்டெடுக்கப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி.. பரபரப்பான ரயில் நிலையம்!

சென்னை விம்கோ ரயில்வே நிலையத்தில் கேட்பார் இன்றி கிடந்த 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை விம்கோ நகர் அடுத்த பொதுப்பீட்டை ரயில்வே நிலையத்தில் ரயில்வே போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நடைமேடை பகுதியில் பயனியர் அமரும் இருக்கையின் கீழ் மூட்டைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் கிடந்துள்ளன.

சந்தேகமடைந்த ரயில்வே போலீசார், மூட்டைகளை அவிழ்த்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சோதனையில் ரேஷன் அரிசியை பதிக்க வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்த மூட்டைகள் ரயில்வே நிலையத்திற்கு நிலையத்திற்கு வந்தது எவ்வாறு இதனை யார் இங்கு எடுத்து வந்தது எதற்காக எடுத்துவரப்பட்டது என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: வக்ஃபு மசோதாவுக்கு சிக்கல்..? காங்கிரஸ் எம்.பி, உச்ச நீதிமன்றத்தில் முதல் மனு தாக்கல்

தொடர்ந்து 25 கிலோ எடை கொண்ட 20 மூட்டை அரிசியை கைப்பற்றிய ரயில்வே போலீசார் கொருக்குப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசியை பத்திரவாக்கம் குடிமை பொருள் வழங்கல் சிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

 முன்னதாக வடசென்னை பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில் இதனை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது 500 கிலோ ரேஷன் அரிசிகள் கைப்பற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதையும் படிங்க: காப்பு காட்டில் யானை வேட்டை.. தருமபுரியில் புதிய வீரப்பன்..? கைதாகி தப்பியவர் சடலமாக மீட்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share