காப்பாற்ற முடியாது...!! - ஊசலாடும் 500 தமிழக மீனவர்களின் உயிர்... கைவிரித்த இந்திய தூதரகம்...!!
எங்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாக கூறி இந்திய தூதரக அதிகாரிகள் கைவிரித்ததாக மீனவர்கள் குற்றச்சாட்டு.
ஈரானில் நடுக்கடலில் சிக்கி தவிக்கும் குமரி,நெல்லை, தூத்துக்குடி,இராமநாதபுரத்தை சேர்ந்த 500 தமிழக மீனவர்கள். எங்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாக கூறி இந்திய தூதரக அதிகாரிகள் கைவிரித்ததாக மீனவர்கள் குற்றச்சாட்டு.
கன்னியாகுமரி, நெல்லை,தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீன வர்கள் ஈரான் நாட்டிற்கு சென்று மீன்பிடித் தொழி லில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் ஈரானின் கிஷ் மற்றும் சீரோ ஆகிய பகுதிகளில் தங்கியிருந்து விசைப்படகுகள் மூலம் மீன்பிடித்து வந்தனர். இந்தநிலையில் போர் சூழல் காரணமாக அவர்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் முடங்கி உள்ளனர்.
தொழில் பாதிக்கப் பட்டதால் வருமானமின்றி தவிக்கும் நாங்கள் போதிய உணவின்றி பெரும் அவதிக்குள்ளாகி படகுகளிலேயே முடங்கிக் கிடக்கிறோம்.ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். போதிய மருத்துவ வசதிகளும் இல்லை என மீனவர்கள் வேதனை தெரிவித்து ஆடியோ வெளியிட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கோட்டைய டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காயம் ஏற்பட்டு போர் சூழலால் மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாமல் படகிலேயே தவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நைஜீரியாவில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள்..!! பதறியடித்து ஓடிய மக்கள்..!! 23 பேர் பரிதாப பலி..!!
இதுகுறித்து இந்திய தூதரகத்தை அணுகிய போது ஆரம்பத்தில் உதவுவதாக கூறிய அதிகாரிகள் தற்போது எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது என கூறி கை விரித்து விட்டதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்தில் உள்ள மீனவர்கள் கிராமங்களிலும் இவர்களை மீட்க கோரி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மீனவர்களின் உறவுகளும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தங்களை எப்படியாவது காப்பாற்றி சொந்த ஊருக்கு அழைத்து சொல்லுங்கள் என ஈரான் நாட்டில் உள்ள கிஸ் மற்றும் சீரோ பகுதியில் ஆழ்கடலில் படகில் தங்கி இருக்கும் மீனவர்கள் கண்ணீர் மல்க ஆடியோ வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: டிக் டிக் டிக்...! விழுப்புரம், பெரம்பலூர் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர சோதனை..!!