×
 

முதல் தேர்தலிலேயே முதல்வர் ஆகணுமாம்.. இவ்வளவுதான் விஜய்..! டி.கே.எஸ் இளங்கோவன் பதிலடி...!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு டி.கே.எஸ் இளங்கோவன் பதிலடி அளித்து பேசினார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் காஞ்சிபுரத்தில் கரூர் துயரத்துக்கு பிறகு முதல் முறையாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார். அப்போது திமுகவை கடுமையாக சாடி பேசினார். பிற அறிஞர் அண்ணாவை மறந்து விட்டார்கள் என்று கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்தார். 

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் திமுக மீதான குற்றச்சாட்டுக்கு டி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி கொடுத்தார். விஜய்க்கு அண்ணாவைப் பற்றி தெரியாது என்றும் அண்ணா முதல்வராக வேண்டும் என கட்சி ஆரம்பிக்கவில்லை எனவும் தெரிவித்தார். அண்ணாவை தற்போது திமுகவினர் மறந்துவிட்டதாக விஜய் குற்றம் சாட்டிய நிலையில் இவ்வாறு பதிலளித்தார்.

திமுகவினர் கொள்கைக்காக சிறைக்குச் சென்றவர்கள் என்றும் குறிப்பிட்டார். மக்களுக்காக போராடுவேன் என கூறி கட்சி தொடங்கி சிறை சென்றவர் பேரறிஞர் அண்ணா என்றும் கூறினார். கட்சிப் பதவிக்காக கொள்ளையடிப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தினரே குற்றம் சாட்டுவதாக தெரிவித்தார். பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை தான் திமுக தற்போது வரை நிறைவேற்றி வருகிறது என்றும் கூறினார். பாஜகவின் அடிமையாக விஜய் இருப்பதாக டி கே எஸ் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு? ஆட்டம் காணுமா திமுக கூட்டணி... விசிக ரவிக்குமார் பரபரப்பு பேட்டி...!

மெட்ரோவிற்கு அனுமதி கொடுக்காத பாஜகவை எதிர்த்து விஜய் பேசாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டுப் பிரச்சனை பற்றி விஜய் என்ன பேசி இருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார். நாங்கள் தற்குறி என்று எல்லாம் பேசவில்லை என்றும் தெரிவித்தார். விஜய்க்கு அண்ணாவைப் பற்றி தெரியாது என்றும் முதல் தேர்தலில் முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தோடு விஜய் வந்துள்ளார் எனவும் குற்றம் சாட்டினார். 

இதையும் படிங்க: திணறும் BLO-க்கள்... லட்சக்கணக்கானோர் வாக்குரிமை பறிபோகும்... என்.ஆர் இளங்கோ எச்சரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share