அதிகாலையில் நடந்த அதிர்ச்சி... கஞ்சா போதையில் கதவைத் தட்டி 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை...!
ஆற்காடு அருகே தனியாக வசித்த 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் கைது
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, வீட்டில் தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்த 60 வயது பெண், தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்த பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று அதிகாலை கஞ்சா போதையில் அந்த வீட்டிற்கு வந்த இளைஞர், கதவைத் தட்டியுள்ளார். பெண் கதவைத் திறந்தவுடன், அவரது வாயை துணியால் அடைத்து வீட்டுக்குள் தள்ளிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 60 வயசு பெருசு செய்யுற காரியமா இது?... தனிமையில் இருந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை...!
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆற்காடு தாலுக்கா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர் ஆற்காடு அருகேயுள்ள அத்திதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான தட்சினாமூர்த்தி என்பது தெரியவந்தது.
போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
60 வயது பெண் ஒருவர் தனியாக வசித்து வந்த நிலையில், கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் ஆற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING போதையில் அரங்கேறிய பயங்கரம்... சென்னையில் 17 வயது சிறுமி நண்பர்களால் பாலியல் வன்கொடுமை...!