×
 

பிரதமர் மோடி என்னை கட்டிப்பிடித்து அன்பு காட்டினார்!! மேற்குவங்க படகோட்டி பெருமிதம்!

என்னை கட்டி பிடித்து அன்பு காட்டினார் என பிரதமர் சவாரி செய்த படகினை இயக்கிய, 72 வயது மேற்கு வங்க படகோட்டி கவுரங்க பிஸ்வாஸ் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான தழுவலால் பெருமிதம் கொண்டுள்ளார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 72 வயது படகோட்டி கவுரங்க பிஸ்வாஸ்.

தேர்தல் பிரசாரத்துக்காக மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி, நேற்று காலை 7 மணிக்கு ஹூக்ளி நதியில் படகு சவாரி மேற்கொண்டார். கங்கை நதியின் கிளையான இந்த நதியில் 35 நிமிடங்கள் பயணம் செய்த அவர், பின்னர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து, “கங்கை நதி மேற்கு வங்கத்தின் ஆன்மா வழியாக பாய்கிறது. இந்தப் பயணம் கங்கை அன்னைக்கு என் நன்றியைத் தெரிவிக்கக் கிடைத்த அரிய வாய்ப்பு” என்று உணர்ச்சிபூர்வமாகப் பதிவிட்டிருந்தார்.

இந்தப் படகை இயக்கிய 72 வயது கவுரங்க பிஸ்வாஸ் பெருமிதத்துடன் கூறியதாவது: “பிரதமர் என்னிடம் வந்து வங்காள மொழியிலேயே என் பெயரை விசாரித்தார். எனக்கு ஹிந்தி சரளமாகத் தெரியாது. அதனால் நானும் வங்காள மொழியிலேயே பதிலளித்தேன். நதியின் நடுப்பகுதிக்குச் சென்றபோது அவர் அதிகம் பேசவில்லை. கரைக்குத் திரும்பிய பிறகு என்னை அருகில் அழைத்து, மிகுந்த அன்புடன் இறுகக் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினார்” என்றார்.

இதையும் படிங்க: பாஜக ஆட்சி அமைந்தால் அகதிகளுக்கு குடியுரிமை! மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி உறுதி!

பிரதமர் அந்த 35 நிமிடப் படகுச் சவாரிக்கு 1,000 ரூபாய் கட்டணமாக வழங்கினார். சவாரிக்கு ஏற்பாடு செய்த 44 வயது படகோட்டி பிரபீர் பிஸ்வாஸ் கூறுகையில், “காலை 7 மணிக்கு மேல் சிலர் வந்து ஏழு படகுகளை வாடகைக்கு எடுத்தனர். அவர்கள் ஏன் வந்தார்கள் என்று முதலில் சொல்லவில்லை. பிரதமர் மோடி படித்துறைப் படிகளில் இறங்கி வருவதைப் பார்த்தபோதுதான், இன்று நமக்கு மிகச் சிறப்பான நாள் என்று உணர்ந்தோம்” என்றார்.

பிரதமர் மோடியின் எளிமையான பேச்சும், அன்பான தழுவலும் படகோட்டி கவுரங்க பிஸ்வாஸின் மனதில் நீண்ட நாள் நிற்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பிரதமரின் மக்கள் நட்பு பற்றிய பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இதையும் படிங்க: ஹுக்ளி நதிக்கரையில் ஒரு படகு பயணம்!! போட்டோ எடுத்து மகிழ்ந்த பிரதமர் மோடி! கங்கைக்கு நன்றி சொல்லி உருக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share