அதிரடி காட்டிய பறக்கும் படை... சென்னையில் ரூ.77 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்...!
சென்னையில் ரூபாய் 77 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது
சென்னை அசோக் நகரில் பறக்கும் படை வாகன தணிக்கையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவந்த 77 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நகைகளை கொண்டு சென்ற தனியார் நிறுவன அதிகாரிகளிடம் தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அசோக் நகர் 11 வது நிழற்சாலையில் பறக்கும் படையினர் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 21 வாகனங்கள் நகைகள் மற்றும் பொருட்கள் வெள்ளி பொருட்களை கொண்டு சென்றன. அதில் 20 வாகனங்களுக்கு உரிய அந்த அனுமதி சீட்டு இருந்தது. அதில் ஒரு வாகனத்திற்கு மட்டும் எந்தவித அனுமதி சீட்டும் இல்லாமல் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைக் கொண்டு செல்வதை அறிந்த பறக்கும் படையினர் அவற்றை எல்லாம் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ஆய்வு செய்து அவற்றின் மதிப்பீட்டை கணக்கிட்ட போது மொத்தம் 77 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது. நகைகளுடன் சேர்ந்து அதனைக் கொண்டு சென்ற வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில அந்த நகைகள் முழுவதுமே வந்து சவக்கார் பேட்டையில் இருக்கக்கூடிய தங்கம் மற்றும் வெள்ளி வியாபாரிகளிடம் இருந்து பெறப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: அரசியல்வாதிகள் நுழைய தடை... 100க்கும் மேற்பட்ட மலைகிராம மக்கள் அதிரடி முடிவு... லட்டு போல் உதிர்ந்த 40 ஆயிரம் வாக்குகள்...!
மொத்தமாக வாங்கி கிண்டியில் இருக்கக்கூடிய ஒரு ஏற்றுமதி நிறுவனத்திற்கு தான் இந்த நகைகளானது கொண்டு செல்லப்படுவதும் தெரிய வந்திருக்கிறது. அங்கிருந்து இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் வியாபாரிகளுக்கு விநியோகம் செய்வதற்காகத்தான் இந்த நகைகளை எடுத்து வந்ததாகவும் பிடிப்பட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தோட நகைகளை பறிமுதல் செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: “ஓட்டு போடப்போற பொண்ணே கலங்கி நிக்காத...” - பாட்டு பாடி வாக்குசேகரித்த சீமான்... அனல் தெறிக்க பேச்சு...!