×
 

“கருப்பை வாய் புற்றுநோய் இனி இல்லை!” - இளம்பெண்களுக்கு இலவச HPV தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கும் முதல்வர்.

“இந்தியாவிலேயே முதன்முறையாகத் தருமபுரி, பெரம்பலூர் உட்பட 4 மாவட்டங்களில் அமல்” - 3.38 லட்சம் இளம்பெண்கள் பயன்பெறுவார்கள்!

தமிழகத்தில் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், இளம்பெண்களுக்கு இலவச HPV (Human Papillomavirus) தடுப்பூசி வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக மாநில அரசு நிதியில் முழுமையாகச் செயல்படுத்தப்படும் இலவசத் தடுப்பூசித் திட்டமாகும்.

கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளதாகக் கண்டறியப்பட்ட தருமபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை மற்றும் அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இத்திட்டம் முதற்கட்டமாகச் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 4 மாவட்டங்களில் சுமார் 30,209 சிறுமிகள் பயன்பெற அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் போது சுமார் 3,38,649 பெண்கள் இதன் மூலம் பயனடைவார்கள். முதற்கட்டமாக 14 வயது சிறுமிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக 9 முதல் 14 வயது வரையுள்ள அனைத்துச் சிறுமிகளுக்கும் இரண்டு தவணைகளாக (6 மாத இடைவெளியில்) இத்தடுப்பூசி செலுத்தப்படும்.

தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் சுமார் ₹2,000 முதல் ₹7,000 வரையிலும், முழுமையான தவணைகளுக்கு ₹14,000 முதல் ₹28,000 வரையிலும் செலவாகும் நிலையில், தமிழக அரசு இதனை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. இத்திட்டம் முதன்மையாக  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்குக் கொண்டு சேர்க்கப்படும். தமிழ்நாடு அரசு இதற்காக ₹36 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதுடன், மாநில அரசே முழுமையாக நிதி உதவி வழங்கி இத்திட்டத்தைச் செயல்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலமாகவும் திகழ்கிறது.

இதையும் படிங்க: “உலக மகளிர் உச்சி மாநாடு”  சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

 

 


 

இதையும் படிங்க: விருதுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள்! 77-ஆவது குடியரசு தினத்தை ஆளுநர் மாளிகையில் கொண்டாடிய முக்கியப் பிரமுகர்கள்.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share