#Breaking வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்தம்... அடுத்த 48 மணி நேரத்தில் காத்திருக்கும் பேராபத்து...!
குமரிக்கடல் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
குமரிக்கடல் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 22ம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவான நிலையில், அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் இயலாத வலுப்பெறுமனே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதே போல் குமரி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நீடித்து வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று காலை 5:30 மணி நிலவரப்படி, குமரி மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இலங்கையை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி வங்கக்கமில் ஒரே நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக் கொண்டுள்ளதால், தமிழகத்தில் படுத்த ஏழு நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் மிக கன மழைக்கான எச்சரிக்கை சில மாவட்டங்களில் கன மழை காண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் (நவ.27ம் தேதி) தெற்கு வங்கக்கடலில் சூறாவளிப்புயல் உருவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.