கடலூரில் மீண்டும் பயங்கரம்... தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து - மாணவர்களின் நிலை என்ன?
விருத்தாசலம் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது வேன் கவிழ்ந்து தனியார் பள்ளி மாணவர்கள் ஆறு பேர் காயம்
கடந்த ஜூலை மாதம் 8ம் தேதி கடலூர் அருகே செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், 4 குழந்தைகள் பலியாகினர், மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், தற்போது பள்ளி வேன் தண்டவாளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் பாத்திமா மெட்ரிக் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் விருத்தாசலம் அதன் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் மாத்தூர், பவழங்குடி, பூவனூர் உள்ளிட்ட பகுதி கிராமத்திலிருந்து பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களை தனியார் வேனில் பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கம் இன்று அந்த மாணவர்களை வேனில் அழைத்து வரும்பொழுது, மங்கலம்பேட்டை அருகே கோ. பூவனூர் கிராமத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் முயன்றுள்ளது.
இதையும் படிங்க: அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி... பாஜக தலைமைக்கு பேரதிர்ச்சி...!
அப்போது திடீரென்று வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் கவிழ்ந்தது. இதனை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் ஓடிச்சென்று அந்த வேனில் இருந்த பள்ளி மாணவர்கள் மீட்டனர். காயம் பட்ட ஆறு மாணவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயம் பட்ட மாணவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தனியார் பள்ளி வேன் ரயில்வே தண்டவளத்தில் கவிழ்ந்த சம்பவம் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒன்றரை வருஷம் ஆச்சு!! வீடு திரும்பிய விண்வெளி நாயகன்!! மேளதாளத்துடன் கொண்டாடிய ஊர்மக்கள்!!