×
 

வாழ்த்துகள் அஜித்... நிரூபிச்சிட்டீங்க.! விருது வென்றுள்ள நடிகர் அஜித்துக்கு செல்வப் பெருந்தகை அன்பு மழை...!

விருது வென்றுள்ள நடிகர் அஜித்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமல்லாது கார் பந்தயத்திலும் கலக்கி வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3- ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தது. தொடர்ந்து இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங்கிலும் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. இப்படியாக கார் ரேசிங்கில் தனது நீங்காத முத்திரையை நடிகர் விஜய் பதித்து வருகிறார்.

தற்போது அவருக்கு ஜென்டில்மேன் டிரைவர் ஆப் தி இயர் 2025 இன்று விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை நடிகர் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு தொழிலதிபரும், கார் பந்தய வீரருமான மறைந்த பிலிப் சாரியோல் (Philippe Charriol) நினைவாக இத்தாலியின் வெனிஸ் நகரில் வழங்கப்படும் 'ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025' (Gentleman Driver of the Year 2025) விருதை பெற்றிருக்கும் நடிகர் அஜித் குமாருக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார். 

இதையும் படிங்க: சல்மான் கான் தீவிரவாதி... பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு...! ரசிகர்கள் ஷாக்...!

தன்னம்பிக்கையும், கட்டுப்பாடும் கடின உழைப்பும்தான் வெற்றியின் அடித்தளம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள் என்று கூறினார். சினிமாவிலும், மோட்டார் விளையாட்டுகளிலும் தமிழர்களின் திறனையும் உயரத்தையும் உலகுக்கு அறிமுகப்படுத்தி வருவது பெருமை என்றும் கூறினார். இந்த சாதனை மேலும் பல இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் அஜித்தின் எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் மேலும் பல வெற்றிகள் கிட்ட மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்த நேரத்துல லண்டன் டூரா? அரசு செலவில் இன்ப சுற்றுலா! முதல்வருக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share