மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி..! குடும்பத்தினருக்கு ஆறுதல்..!
உடல் நலக்குறைவால் உயிரிழந்த நடிகர் ராஜேஷின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ராஜேஷ், அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தவர் நடிகர் ராஜேஷ். நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்த ராஜேஷ் இன்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் டெல்லி பயண மர்மத்தை உடைத்த ஜி.கே.வாசன்... புட்டு, புட்டு வைத்த 3 காரணங்கள்!
இந்த நிலையில் மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து துயரத்தில் பங்கெடுத்தார்.
இதையும் படிங்க: மீனவர்களின் கண்ணீரைத் துடைக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி! முதல்வர் ஸ்டாலின் உறுதி...