×
 

வேற லெவல் ட்விஸ்ட்! அரசியலில் களமிறங்கும் சூர்யா? என்ன சொல்லி இருக்காங்கன்னு தெரியுமா

நடிகர் சூர்யா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தனது நடிப்பில் மட்டுமல்லாது சமூக சேவைகளும் சிறந்த பங்காற்றி வருபவர். குறிப்பாக அகரம் பவுண்டேஷன் என்பதன் மூலம் ஏழை எளிய பிள்ளைகளுக்கு நல் உள்ளங்களின் ஆதரவோடு சிறந்த கல்வியை வழங்கி வருகிறார். தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கம்.

தமிழ்நாட்டில் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு கல்வி மூலம் சமூக, பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கிறது. சமீபத்தில் அவரது அகரம் பவுண்டேஷன் தொடர்பான விஷயங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. நடிகர் சூர்யா அரசியலுக்கு வரப்போகிறார் என்றும் ஒரு கட்சியின் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்ற தகவலும் பரவியது. 

இந்த நிலையில் நடிகர் சூர்யா அரசியலில் களமிறங்குவதாக வரும் செய்தி பொய் என அவரது ரசிகர் மன்றம் விளக்கமளித்துள்ளது. சட்டமன்றத் தேர்தலில் நடிகர் சூர்யா களமிறங்க போகிறார் என சமூக ஊடகங்களில் பரவும் செய்தி பொய் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அது FAKE! சீல் கூட இல்ல.. இபிஎஸ்ஐ கண்டித்து வெளியானது போலி அறிக்கை என ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சங்கம் விளக்கம்..!

சூர்யா அரசியலில் களமிறங்குவதாக வரும் செய்தி பொய் என்பதுடன் அவரின் கோட்பாடுகளுக்கு முரணானது என்றும் சூர்யாவின் கலை உலக பயணமும் அகரமும் அவருக்கு நிறைவை தந்துள்ளதாக அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கம் தெரிவித்துள்ளது. சூர்யாவின் கவனம் சினிமாவில் மட்டுமே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இபிஎஸ் மன்னிப்பு கேட்கலனா போராட்டம் வெடிக்கும்.. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் திட்டவட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share