நடிகை கஸ்தூரி பாஜகவில் ஐக்கியம்... நயினார் நாகேந்திரன் சிறப்பான வரவேற்பு!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்தார்.
1991 ஆம் ஆண்டு இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் ஆத்தா உன் கோயிலிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கஸ்தூரி. 1990களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இந்தியன், செந்தமிழ்ப்பாட்டு, அமைதிப்படை போன்ற படங்கள் இவருக்கு புகழைத் தேடித் தந்தன. 1992 ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகிப் போட்டியில் வெற்றி பெற்று மேலும் கவனத்தை ஈர்த்தார். சமூகப் பிரச்சினைகள், அரசியல் நிகழ்வுகள், மற்றும் தமிழக அரசியல் குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். இவரது கருத்துகள் பெரும்பாலும் திமுகவுக்கு எதிரானவையாகவும், பாஜக மற்றும் அதிமுகவுக்கு ஆதரவாகவும் இருந்தன.
கஸ்தூரியின் அரசியல் கருத்துகள் பெரும்பாலும் திமுகவுக்கு எதிராகவும், பாஜகவுக்கு ஆதரவாகவும் இருந்தன. திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த அவர், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளன என்று குற்றம்சாட்டினார். மூன்று மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாட்டில் மட்டும் பிரச்சனை இருப்பதாகவும், மற்ற மாநிலங்களில் இது பிரச்சினையாக இல்லை என்றும் கூறினார். கோயில் சொத்துகள் தொடர்பாகவும் அவர் தனது கருத்தை தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: நீதிமன்ற தீர்ப்பு முதல்வருக்கு சம்மட்டி அடி! இனியாச்சு புரிஞ்சுக்கோங்க.. நயினார் நாகேந்திரன்..!
இந்த நிலையில், கஸ்தூரி முறையாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். அவருக்கு நயினார் நாகேந்திரன் சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும், திருநங்கை நமீதா மாரிமுத்துவும் நைனார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவரையும் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இதையும் படிங்க: கேள்வியே கேட்கக்கூடாதுல? ஆள் சேர்க்கை ஒன்னு தான் கேடு! திமுக எம்.எல்.ஏவுக்கு நயினார் கடும் கண்டனம்..!