தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் பறந்த அதிரடி உத்தரவு...!
இன்றும் (05.06.2025) , நாளையும் (06.06.2025) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்களை ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன
வைகாசி மாதத்தில் சுப முகூர்த்தம் மற்றும் சுப தினங்களில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் பத்திரப்பதிவு செய்வது வழக்கமாகும். இதனால் மங்களகரமான தினங்களான இன்றும் (05.06.2025) , நாளையும் (06.06.2025) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்களை ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது வைகாசி மாதத்தின் மங்களகரமான தினங்களான 05.06.2025 மற்றும் 06.06.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
இதனை ஏற்று வைகாசி மாதத்தின் மங்களகரமான தினங்களான 05.06.2025 மற்றும் 06.06.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடஉத்தரவிடப்பட்டுள்ளது.