வீடு, நிலம் பத்திரப்பதிவு செய்வோருக்கு இன்றும், நாளையும் காத்திருக்கும் குட் நியூஸ்... பதிவுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!
தமிழகத்தில் வீடு அல்லது மனை வாங்குபவர்கள், அதற்கான பத்திரங்களை பதிவு செய்வது கட்டாயம்.
முகூர்த்த நாட்களில் சார்-பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுகள் வழக்கத்தை விட அதிக அளவில் நடைபெறுவது அனைவரும் அறிந்த விஷயம். அந்த வகையில், நாளை ஆகஸ்ட் 28 மற்றும் நாளை மறுநாள் ஆகஸ்ட் 29 ஆகிய இரண்டு நாட்களும் சுபமுகூர்த்த தினங்களாக இருப்பதால், “கூடுதல் டோக்கன்கள் ஒதுக்க வேண்டும்” என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, தமிழக பதிவுத்துறை இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வீடு அல்லது மனை வாங்குபவர்கள், அதற்கான பத்திரங்களை பதிவு செய்வது கட்டாயம். குறிப்பாக, சுபமுகூர்த்த நாட்களில் மக்கள் உற்சாகத்தோடு பத்திரப்பதிவைச் செய்ய முன்வருகிறார்கள். அதனால்தான், அந்த நாட்களில் மட்டுமே கூடுதல் டோக்கன்கள் வழங்கும் வகையில் பதிவுத்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்த மாற்றத்தால், ஒருபுறம் பொதுமக்களின் கோரிக்கை நிறைவேறுகிறது, மறுபுறம் அரசாங்கத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. அதன்படி, வரும் ஆவணி மாத சுபமுகூர்த்த தினங்களான 28.08.2025 மற்றும் 29.08.2025 ஆகிய நாட்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படவுள்ளன.
இதையும் படிங்க: அணுசக்தி ஒப்பந்தம்!! முரண்டு பிடிக்கும் ஈரான்!! ஐரோப்பிய நாடுகள் வார்னிங்!
வழக்கமாக ஒரு சார்-பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 டோக்கன்கள் வழங்கப்படவுள்ளன. இரண்டு சார்-பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200 டோக்கன்களுக்கு பதிலாக 300 டோக்கன்கள் வழங்கப்படவுள்ளன. வழக்கமாக அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களில் தினந்தோறும் வழங்கப்பட்டு வந்த 100 டோக்கன்களுக்குப் பதிலாக 150 டோக்கன்கள் வழங்கப்படவுள்ளன. ஏற்கெனவே உள்ள 12 “தட்கல் டோக்கன்களுடன்” கூடுதலாக 4 தட்கல் டோக்கன்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பின் மூலம், முகூர்த்த நாளில் பத்திரப்பதிவு செய்ய நினைக்கும் பொதுமக்கள் சிரமமின்றி பதிவு செய்ய வசதி கிடைக்கிறது.
இதையும் படிங்க: 9 பெண் உட்பட 30 நக்சலைட்டுகள் சரண்!! அமைதி நோக்கி நகரும் சத்தீஸ்கர்!!