×
 

தவெக அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா..? EPS- ஐ விளாசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!

தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா என்ற கேள்விக்கு ஆதவ் அர்ஜுனா விளக்கம் கொடுத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் 9 அமைச்சர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கான இலாக்கா ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிப்பார் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என முதலமைச்சர் விஜய் விரும்புகிறார் எனவும் தெரிவித்துள்ளார். சமூக நீதி அடிப்படையில் இயங்கும் கட்சிகள் அமைச்சரமையில் அமைச்சரவையில் இணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அமைச்சரவையில் இடம்பெற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அழைப்பதாகவும் குறிப்பிட்டார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் அமைச்சரவையில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக அரசின் அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில் கொடுத்தார். நல்ல எதிர்க்கட்சியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டுவர திமுக அதிமுக இணைந்து செயல்பட்டதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: "அரியர்ஸ் வைக்காதீங்க"..! நேரு ஸ்டேடியத்தில் அமைச்சர் ஆதவ் விளையாட்டு வீரர்களுக்கு அறிவுரை..!

திமுகவுடன் இணைந்து பின்புற வாசல் வழியாக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்க முயற்சி செய்தார் என்று குற்றம் சாட்டினார். அதிமுகவை டெல்லியில் அடமானம் வைத்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி என்றும் உடனடியாக கட்சியை காப்பாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதிமுகவை தமிழக வெற்றி கழகம் தோழமையோடு தான் அணுகுகிறது. என்றும் கூறினார். 

இதையும் படிங்க: நம்பிக்கை வீணாகாது... செயலால் பேசுவேன்..! வாக்களித்த மக்களுக்கு ஆதவ் அர்ஜுனா உறுதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share