பெண் போலீஸ் கடத்தல் விவகாரம்... ஸ்டாலின் அரசின் கேரக்டர் இதுதான்... அதிமுக கண்டனம்..!
பெண் போலீஸ் கடத்தல் தொடர்பான தகவலை சுட்டிக்காட்டி அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் அருகே பெண் போலீஸ் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு ஒரு வழிப்பாதையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் வேகமாக ஆட்டோவை ஓட்டி வந்தார். ஆட்டோ டிரைவர் குடி போதை யில் இருந்ததாக தெரிகிறது. ஆட்டோவை பெண் போலீஸ் மடக்கினார். ஆட்டோவை நிறுத்துவதுபோல நிறுத்திய டிரைவர் பெண் போலீசை திடீரென்று கட்டிப்பிடித்து ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றதாக தெரிகிறது.
இதனால் பெண் போலீஸ் கூச்சலிட்டார். வேகமாக சென்ற ஆட்டோவை பொதுமக்கள் மடக்கினர். பின்னர் பெண் போலீஸ் மீட்கப்பட்டார். குடிபோதையில் இருந்த ஆட்டோ டிரைவர் மயிலாப்பூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே திமுக அரசை அதிமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இந்த நிலையில் காவலர் கடத்தப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க: வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? தேர்தல் பணி தரமா இருக்கணும்... திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஒன் டூ ஒன் ஆலோசனை...!
சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்ட பெண் காவலருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டதாக வரும் செய்தி, இன்றைய விடியா திமுக ஆட்சியின் அவல நிலையை வெட்ட வெளிச்சமாக்குவதாக தெரிவித்துள்ளது.
அலங்கார மேடையில் சினிமா வசனம் பேசும் பொம்மை முதல்வரின் ஆட்சியின் கேரக்டர் இது தான் என்றும் சாடியுள்ளது. உங்க ஆட்சியின் கேரக்டர் இதுதானா பொம்மை முதல்வரே என்றும் கேள்விகளை எழுப்பி உள்ளது.
இதையும் படிங்க: குட் நியூஸ்... ரூ.65 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்...!