×
 

தவெகவில் இசக்கி சுப்பையா மாஸ் ENTRY..! ராஜினாமா ஏற்ற உடனே TWIST..! பிளக்கும் அதிமுக..!

இசக்கி சுப்பையாவின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தற்போது நிலவும் அரசியல் பதற்றத்துக்கு மத்தியில் அதிமுக கட்சிக்கு தொடர் பின்னடைவுகள் ஏற்பட்டு வருகின்றன. முன்னதாக மூன்று அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையாவின் ராஜினாமாவும் பேசுபொருளாகியுள்ளது. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இந்த ராஜினாமாக்களை கையாண்ட விதம் குறித்து அரசியல் கட்சிகளிடையே கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நேற்று மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி எம்எல்ஏ பி. சத்தியபாமா ஆகிய மூவரும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்தனர்.

இவர்கள் எஸ்.பி. வேலுமணி அணியைச் சேர்ந்தவர்கள் என்பதும், சமீபத்திய நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சபாநாயகர் விரைவில் இந்த ராஜினாமாக்களை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார். இதனால் அதிமுகவின் சட்டமன்ற பலம் குறைந்தது. ராஜினாமா செய்த மூவரும் சபாநாயகரை சந்தித்த உடனேயே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து தவெகவில் இணைந்தனர். தவெக தலைமை அலுவலகத்தில் உறுப்பினர் அட்டைகளும் வழங்கப்பட்டன.

இந்த நடவடிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். “குதிரைபேரம்” என்று சொல்லி தவெக அரசை குற்றம் சாட்டினர். எதிர்க்கட்சிகளும் இதை “அரசியல் அநீதி” என்று விமர்சித்தன. சபாநாயகரின் முடிவு நடைமுறைப்படி சரியானதுதான் என்றாலும், நேர்மையற்ற செயல்பாடு என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.இந்த சர்ச்சைக்கு மத்தியில்தான் மே 26 அன்று அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். முதலில் டைப் செய்யப்பட்ட கடிதத்தை அளித்தபோது சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதை ஏற்க மறுத்தார்.

இதையும் படிங்க: எதுபேசுனாலும் சரி..! விதிப்படி தான் நடக்கிறேன்... சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உறுதி..!

ராஜினாமா கடிதம் கைப்பட எழுதியதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இசக்கி சுப்பையா உடனடியாக தன் அறைக்குச் சென்று கைப்பட எழுதிய புதிய கடிதத்தை சமர்ப்பித்தார். சபாநாயகர் அதை ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிமுகவின் ராஜினாமா செய்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது. பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் அம்பாசமுத்திரம் எம் எல் ஏ இசக்கி சுப்பையாவின் ராஜினாமாவும் இயக்கப்படுவதாக சபாநாயகர் பிரபாகர் அறிவித்துள்ளார். உடன் தொடர்ச்சியாக அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த் முன்னிலையில் இசக்கி சுப்பையா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

இதையும் படிங்க: "REELS போட்டு விளையாடுங்க பாஸ்"..! பீனிக்ஸ் பறவையாய் மீண்டு வருவோம்..! ஆத்திரத்தில் வெளுத்து வாங்கிய அதிமுக..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share