×
 

அத்தனையும் உருட்டா சார்..? சட்டப்பேரவை LIVE CUT..! விளாசிய அதிமுக..!!

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை நிறுத்தப்பட்டதாக அதிமுக விமர்சனம் செய்துள்ளது.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்று, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் சிறுபான்மை அரசை அமைத்தது. இந்தப் புதிய அரசு பொறுப்பேற்ற சில வாரங்களுக்குள், சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலையில் ஒளிபரப்பும் முடிவை எடுத்து அறிவித்தது.

இது தமிழக சட்டப்பேரவையின் செயல்பாடுகளில் பெரும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இதுவரை தமிழக சட்டப்பேரவை கூட்டங்கள் பெரும்பாலும் பாரம்பரிய ஊடகங்கள் வாயிலாகவே பகிரப்பட்டன. சில முக்கிய நிகழ்வுகள் மட்டுமே தேர்ந்தெடுத்து ஒளிபரப்பப்பட்டன. ஆனால் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலிருந்தே முழு நேரலை ஒளிபரப்பு தொடங்கியது.

ஆளுநர் உரை, சபாநாயகர் தேர்தல், நம்பிக்கை வாக்கெடுப்பு, விவாதங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் நேரடியாக ஊடகங்கள் மூலம் ஒளிபரப்பப்பட்டன. பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: "குதிரை பேரம்"..! எப்படி பொதுநல வழக்காகும்..? தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!!

முழு நேரலை.. முழு நேரலை… என்பதெல்லாம் அத்தனையும் உருட்டா சார் என்ற கேள்வி எழுப்பியுள்ளது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்று தெரிவித்துள்ள அதிமுக, நல்லா இருக்கு சார் உங்க மாற்றம். எந்த வாக்குறுதியும் நிறைவேத்துற மாதிரி ஐடியாவே இல்ல போல, அப்படித்தானே சார் என்ற கேள்வி எழுப்பி இருக்கிறது. 

இதையும் படிங்க: அப்படி ஒன்னும் பெருசா இல்ல..! தவெக வெள்ளை அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share