அதிமுகவின் 10 ஆயிரம் ரூபாய் கூப்பன்..! கையும் களவுமாக பிடித்த திமுக நிர்வாகிகள்..!
பத்தாயிரம் ரூபாய் கூட்டணி அதிமுகவினர் விநியோகம் செய்ததாக கூறப்படும் நிலையில் கையும் களவுமாக பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் திமுக நிர்வாகிகள் ஒப்படைத்துள்ளனர்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர்.
பரிசுப் பொருட்கள் பணம் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் சில இடங்களில் பரிசு டோக்கன்கள், கூப்பன்கள், பண பட்டுவாடா ஆகியவை நிகழ்கின்றன. தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தகைய சம்பவங்கள் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பை இறுக்கமாக்கின.
பணப் பரிவர்த்தனை, லஞ்சம், இலவசங்கள் வழங்குதல் போன்றவற்றைத் தடுக்க பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டன. கடலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, மாநிலத்தின் பல பகுதிகளிலும் இதுபோன்ற சந்தேகத்துக்குரிய பணப் பரிவர்த்தனைகள், கூப்பன்கள், டோக்கன்கள் தொடர்பான புகார்கள் எழுந்தன.
இதையும் படிங்க: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.10,000".. இரட்டை இலை சின்னத்துடன் சிக்கிய மாதிரி காசோலைகள்.!
இந்த நிலையில், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000, ரூ.2000 டோக்கன்களை வாக்காளர்களுக்கு அதிமுகவினர் விநியோகித்ததாக கூறப்படுகிறது. அவர்களை கையும் களவுமாக பிடித்து டோக்கன்களை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் திமுக நிர்வாகிகள் ஒப்படைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பெண்களுக்கு பாதுகாப்பில்லை... திமுக அரசை கிழித்து தொங்க விட்ட நடிகை கெளதமி...!