×
 

"நாவடக்கம் தேவை ஆதவ்"... ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரிய தொண்டர் EPS... விளாசிய கே.பி. முனுசாமி..!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிமுக கட்சியின் பிளவு மற்றும் அதிருப்தி உள்ளிட்டவை காரணமாக பிளவுபட்டு வருகிறது. பல்வேறு அதிமுகவினர் தமிழக வெற்றி கழகத்தில் ஐக்கியமாகி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, எம்.சி. சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழக வெற்றி கழகத்தில் ஐக்கியம் ஆகினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று தெரிவித்தார். அதிமுகவில் இருந்து வரும் அனைவரின் உணர்வுக்கும் மதிப்பளிக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதிமுகவினர் ஆதரித்ததால் தான் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றது எனவும் கூறினார்.

கலைஞரின் அனைத்து உண்மையான விசுவாசிகளையும் தமிழக வெற்றி கழகத்திற்கு வரவேற்கிறோம் என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசிய அமைச்சர் ஆதவ அர்ஜுனாவிற்கு அதிமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொச்சைப்படுத்தி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஆதவ் அர்ஜுனாவுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: அதிமுகவின் இந்த நிலைக்கு எடப்பாடி தான் காரணம்... ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு..!!

பேப்பரில் மட்டும்தான் பொதுச் செயலாளர் இபிஎஸ் எனக் கூறிய ஆதவ் அர்ஜுனாவிற்கு நாவடக்கம் தேவை என்றும் கண்டனம் கூறினார். ஜெயலலிதா இருந்தபோது நம்பிக்கை கூறிய தொண்டனாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் குறிப்பிட்டார். விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தான்தோன்றித்தனமாக பேசுகிறார் என்றும் கூறினார். தலைவருக்காக உழைக்காத ஆதவ் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ அங்கெல்லாம் ஓடியவர் என்றும் தெரிவித்துள்ளார். அதிமுகவையும் தேடி வந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: வாழும் காலம் வரை விஜய் தான் முதல்வர்..! தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு பேச்சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share