திருப்பத்தூரை தினகரனுக்கு தாரை வார்ப்பதா? அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி..! பரபரப்பு..!!
திருப்பத்தூர் அமமுக கட்சிக்கு ஒதுக்க இருப்பதாக வெளியான தகவலால் அதிமுக தொண்டர் தீக்குளிக்கும் முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், டிடிவி தினகரன் தலைமையில் 2018-இல் அதிமுகவிலிருந்து பிரிந்து உருவான கட்சி. அம்மா என்று அழைக்கப்படும் ஜெயலலிதாவின் பெயரை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, 2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்து 165 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாமல் போனது. அப்போது அது சுமார் 2.35 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. பின்னர் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு சுமார் ஒரு சதவீத வாக்குகளைப் பெற்றது.
இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் 11 தொகுதிகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமமுக போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. மூன்று தனி தொகுதி மற்றும் எட்டு பொது தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சைதாப்பேட்டை, சோளிங்கர், பூவிருந்தவல்லி, நாங்குநேரி, ஓட்டப்பிடாரம், பெரியகுளம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் மதுரை மத்தி, தஞ்சாவூர், காரைக்குடி, திருச்சி மேற்கு, மன்னார்குடி ஆகிய தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டது. இருப்பினும் திருப்பத்தூர் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப்பட இருப்பதாக வெளியான தகவலால் அதிருப்தி அடைந்த அதிமுக தொண்டரவு ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நாதக நிர்வாகி பேசிக் கொண்டிருந்த போதே நாற்காலியை வீசிய திமுகவினர்..!! அராஜகம்... வளர்மதி கண்டனம்..!!
திமுக தொண்டர் ராஜா என்பவர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் அதிமுகவிற்கு நிர்வாகி திருப்பதிக்கு சீட்டு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில் திருப்பதி அலுவலகம் முன்பு ராஜா தீக்குளிக்க முயன்றதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் ஞானசேகரனுக்கு சீட்டு ஒதுக்கியதாக தகவல் வெளியான ஆத்திரத்தில் இவ்வாறு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: பாஜகவுக்கு 27 தொகுதிகள்… அதிமுகவுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது..!!