×
 

அதிமுகவினர் மீது போட்டாச்சு CASE! இனிமே ஆம்புலன்ஸ் டிரைவர் மேல கைய வெச்சா! எச்சரிக்கும் அரசு

ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்திய அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்தின் போது ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்ததால் ஆத்திரமடைந்த இபிஎஸ், மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியது சர்ச்சையை கிளப்பியது.  இனி கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால், அதை ஓட்டிட்டு வர்ற ட்ரைவரே அதில் பேஷண்டாகப் போகிற நிலைமை வரும் என்று பழனிச்சாமி பேசி உள்ளார்.

அது மட்டும் இல்லாமல் அந்த வாகனத்தின் நம்பரை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் எப்போது தனது பிரச்சாரம் நடந்தாலும் அங்கு ஆம்புலன்ஸ் வருவதாகவும் கூறியிருந்தார். ஆளுங்கட்சியை கடுமையாக சாடி பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தனது எல்லா பிரச்சாரத்திலும் ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படுவதாகவும், இடையூறு செய்யவை இவ்வாறு செய்யப்படுவதாகவும் அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இருப்பினும் ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு மிரட்டல் விடுக்குமாறு எடப்பாடி பழனிச்சாமி பேசி இருப்பதற்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் உட்பட திமுகவினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த பிரச்சனை ஓய்வதற்குள், திருச்சி மாவட்டம் துறையூரில் ஆம்புலன்ஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி அதிமுகவினர், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையும் படிங்க: ஆம்புலன்ஸை தாக்கினால் 10 வருஷம் ஜெயில்... தமிழக அரசு எச்சரிக்கை..!

ஆம்புலன்ஸ் வாகனம் மீதும் ஓட்டுநர்கள் மீதும் தாக்குதல் நடத்தினால் பத்து வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்த சுற்றறிக்கையும் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்திய அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. துறையூர் அதிமுக நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்ட 10 பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி... பாஜக தலைமைக்கு பேரதிர்ச்சி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share