"வழக்குப் பதிவு பண்ணுங்க..." - எடப்பாடி பழனிசாமியால் அவதிக்கு ஆளான மக்கள் ஆவேசம்..!
மதுராந்தகத்தில் இரவு நேரத்தில் காற்றுடன் கூடிய மழை காரணமாக அதிமுக பேனர்கள் கீழ விழுந்து போக்குவரத்து பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நேற்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் மக்களைக் காப்போம் தமிழகத்தின் மீட்போம் என்ற பெயரில் புரட்சித் தமிழர் எழுச்சி பயணத்தின் பிரச்சார கூட்டமானது செய்யூர் மதுராந்தகம் செங்கல்பட்டு ஆகிய சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றது நடைபெற்றது.
ஆகவே அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை வரவேற்கும் விதமாக அதிமுக சார்பில் மதுராந்தகம் பஜார் வீதி தேரடி தெருமாம்பாக்கம் மேம்பாலம் ஆகிய பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பேனர்கள் மதுராந்தகத்தில் முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த பேனர்கள் இரவு நேரத்தில் காற்றுடன் கூடிய மழையானது பெய்த காரணத்தினால் பேனர்கள் அனைத்தும் மதுராந்தகம் நகர் பகுதியில் உள்ள சாலையில் விழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதையும் படிங்க: “உஷாரய்யா.. உஷாரு... ஓரஞ்சாரம் உஷாரு...” - மக்களுக்கு உயிர் பயம் காட்டும் அதிமுக...!
மீதம்முள்ள பேனர்கள் தற்பொழுது மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் இவை இவர்கள் மீது சரிந்து விழுந்து ஆபத்தை ஏற்படுத்த கூடும் ஆகவே பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக சாலையில் விழுந்த பேனர்களை அதிமுக நிர்வாகிகள் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் பாதுகாப்பு இல்லாத முறையில் பேனர்களை வைத்த அதிமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அடுத்த முதல்வர் இபிஎஸ்! வாங்க உழைக்கலாம்.. பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை சூளுரை..!