×
 

தமிழ்நாடே காத்திருந்த முடிவு... வதந்திகளுக்கு மிகப்பெரிய முற்றுப்புள்ளி... தெள்ளத்தெளிவாக அறிவித்தது அதிமுக தலைமை...!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நேற்று முதலே பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதிமுக எம்எல்ஏக்களுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் வதந்தி மட்டுமே என அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்த பதிவு எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பதிவில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்று எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து ஆலோசனையில் ஈடுபட்டதாகவும், எனவே கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது அல்லது இருவேறு கருத்துகள் உருவாகியுள்ளன என்ற தகவல்கள் உண்மையல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தற்போது முக்கிய அரசியல் பேசுபொருளாக மாறியுள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நேற்று முதலே பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், அனைத்து எம்எல்ஏக்களும் இணைந்து எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தியதாக கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

“சில ஊடகங்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கேள்விகள் இருந்தால் நேரடியாக எங்களை தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம். அதற்கு பதிலாக பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக தேசிய ஊடகங்கள் இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! 15 எம்.எல்.ஏ-க்களுடன் புதுச்சேரி சொகுசு விடுதியில் முகாமிட்ட சி.வி.சண்முகம்!

உண்மையான செய்திகளை வெளியிட வேண்டும் என்ற அக்கறை இருந்தால், சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விளக்கம் கேட்டு வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நேற்று சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள் தனியாக ஆலோசனை நடத்தியதோடு, பின்னர் மாலை நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும் அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் உள்ள அபினயா ரிசார்ட்டில் 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்பேரிலேயே அவர்கள் அங்கு தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், எடப்பாடி பழனிசாமி புதுச்சேரி செல்லும் வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரை அவரது இல்லத்தில் எந்தவித நகர்வும் இல்லை.

தற்போது அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு, உண்மையான செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 47 எம்எல்ஏக்களுடன் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள அதிமுக, அடுத்த கட்டமாக எவ்வாறு செயல்பட உள்ளது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களிலும், மக்களிடையிலும் அதிகரித்துள்ளது. திமுக ஏற்கனவே எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் நிலையில், அதிமுகவும் தனது அரசியல் நகர்வுகளை எவ்வாறு முன்னெடுக்கப் போகிறது என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.அதேபோல், அதிமுக கூட்டணி மற்றும் ஆதரவு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியானாலும், அவற்றை கட்சி அதிகாரப்பூர்வமாக தொடர்ந்து மறுத்து வருகிறது

இதையும் படிங்க: “தவெகவுக்கு ஆதரவு இல்லை” - அதிமுக அதிரடி அறிவிப்பு: முற்றுப்புள்ளி வைத்தார் கே.பி. முனுசாமி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share